இராசா மிராசுதார் மருத்துவமனையில் சிசு நல நோய் தொற்று சிகிச்சை பிரிவு துவக்கம்
தஞ்சாவூர், ஜன.30- தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் அரசு மருத்துவமனை மகப்பேறு அவசர சிகிச்சைப் பகுதியில் சிசு நல நோய் தொற்று சிகிச்சை பிரிவினை, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. “தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் அரசு மருத்துவமனை மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவில் நோய்த்தொற்று உள்ள குழந்தைகளுக்கு புதிதாக குழந்தைகள் நல நோய் தொற்று சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் நோய்த் தொற்றுள்ள 8 குழந்தைகளுக்கு தனி அறையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நல்ல நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்” என்றார். இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருந்துவமனை முதல்வர் மரு.பாலாஜிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் போடியில் உறுதிமொழி ஏற்பு
தேனி, ஜன.30- மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தமிழ் நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் போடியில் மத வெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மேடையின் ஒருங்கிணைப்பாளர் கே. ராஜப்பன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி சார்பாக மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.சன்னாசி, நகர் தலை வர் முசாக் மந்திரி, திராவிடர் கழக தலைவர் ச.ரகுநாக நாதன், போடி வர்த்தகர்கள் சங்க பொருளாளர் பால கிருஷ்ணன், சிறுபான்மை நலக்குழு மாவட்டத் தலை வர் ஜி.எம்.நாகராஜன், துணைத் தலைவர் பேராசிரியர் சவுக்கத் அலி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன், மாதர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.மீனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் சி.முனீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
திண்டுக்கல், ஜன.30- பழனியில் தோழர் ஆர்.ஆர். நினைவகத்தில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கே.பி. பெருமாள், தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயி கள் சங்கத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.பெருமாள் வாழ்த்தி பேசினார். இக்கூட்டத்தில் 14 பேர் கொண்ட புதிய மாவட்டக் கூழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவராக எம். பெரியசாமி, மாவட்டச் செயலாளராக என்.பெருமாள், பொருளாளராக கன்னிவாடி குணசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு நடுவழியில் குழந்தை பிறந்தது
சின்னாளப்பட்டி, ஜன.30- திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (28). இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சாந்தி (25) என்பவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாந்திக்கு வியாழ னன்று வயிற்று வலி ஏற்பட்டதால், அருகில் இருந்த ஆட்டோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழியிலேயே சாந்திக்கு வலி அதிகரித்துள்ளது. இதனால், வக்கம்பட்டி யை அடுத்த திண்டுக்கல் ரோட்டில் ஆட்டோவில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலு தவி சிகிச்சை செய்து தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
சிறுபான்மை மக்கள் நலக்குழு உறுதி ஏற்பு
தேனி, ஜன.30- மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கம்பம், கோம்பை, சின்னமனூர், பெரியகுளம் நகரங்களில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதவெறி எதிர்ப்பு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், மாவட்ட துணைத் தலை வர்கள் செளக்கத் அலி, கதீஜா பேகம், அக்பர், மாவட்ட இணைச் செயலாளர்கள் டி.கே.சீனிவாசன், மன்னர் மன்னன், மஸ்தான், மாவட்ட பொருளாளர் ஜோசப், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இம்ரான்கான், ஜெகன்நாதன், ஶ்ரீராமன், அலெக்சாண்டர் உள்ளிட்ட பலரும், விவசாய சங்க தலைவர்கள் லட்சுமணன், மனோகரன், ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி, இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமராஜ், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கம்பம் ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.