districts

img

சிபிஎம் தொடர் முயற்சியால் 57 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா: எம்.சின்னதுரை எம்எல்ஏ வழங்கினார்

புதுக்கோட்டை, பிப்.24-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் 57 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தனது தேர்தல் வாக்குறுதியாக, ஆண்டாண்டு காலமாக புறம்போக்குகளில் குடியிருந்து வரும் எழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்திருந்தார். எம்.சின்னதுரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியேற்றது முதல், இது தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து பலவகையான புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுத்து வந்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி கந்தர்வகோட்டையில் போராட்டமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் கந்தர்வகோட்டை தொகுதிக்குட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கணக்கானோருக்கு, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரையின் முயற்சியால் இலவச  மனைப்பட்டா பெற்றுக் கொடுக்கப் பட்டது. கந்தர்வகோட்டை தாலுகா, மஞ்சப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைவிழுந்தான் கேணியைச் சேர்ந்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு  இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமையில் கடந்த 35 ஆண்டு களாகப் போராடி வந்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்யில் நடை பெற்ற தொடர் போராட்டத்தின் காரண மாகவும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியின் காரணமாகவும் ஆனை  விழுந்தான் கேணியைச் சேர்ந்த 57  குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வருவாய்த்துறை உத்தரவிட்டது. முதல் கட்டமாக, 28  குடும்பங்களுக்கு சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை,  வருவாய்த்துறையினர் முன்னிலையில் திங்கட்கிழமை இலவச மனைப்பட்டா வழங்கினார்.  இந்நிகழ்வில், கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா ளர் ஜி. பன்னீர்செல்வம், கிராம உதவி யாளர் செல்வராணி, ஜனநாயக மாதர்  சங்க மாவட்டச் செயலாளர் பி .சுசிலா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.