குறுக்குப் பாறையூரில் 20வது நாளாக மறியல் - கைது
சேலம், பிப் 24 - பாறையூரில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிராக 20 ஆவது நாளாக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். குப்பை கழிவுகளை கொட்டுவதால், விவசாயத்தையும், பொதுமக்களையும் பாதிக்கும் என்பதால், சேலம் மாவட்டம் பறையூரில், கடந்த 8 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை மீறி மீண்டும் குப்பை கொட்டும் நடவடிக்கையை மேற்கொண்டதால், கடந்த 20 நாட்களாக விவசாயிகள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதன்ஒருபகுதியாக திங்களன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போராட்டத்தை வாழ்த்தி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு உள்ளிட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகளும், பாதிக்கப்படும் விவசாயிகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
மயானத்திற்கு செல்ல சாலை வசதி
தருமபுரி பிப்-24, மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாமல் ஒத்தை யடி பாதையில் செல்வதாகவும், மயானத்திற்கு சாலை அமைத்து தரவேண்டும் என செட்டிக்கரை இந்திரா நகர் மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி ஒன்றியத்திற்கு பட்டது செட்டிகரை இந்திரா நகர் இங்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாய கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இம்மக்களுக்கு மயான வசதி இக்கிராமத்தின் அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ளவர்கள் இறந்தால் அந்த மயானத்தில் அடக்கம் செய் வது வழக்கம். இந்த மயானத்திற்கு இறந்தவர்களை எடுத்து செல்ல சாலை இல்லை. ஒற்றையடி பாதையில் விவசாய நிலத்தை ஒட்டியே எடுத்து செல்ல வேண்டும். மழை காலங்கள் சேரும் சகுதியுமான வயல்வெளியில் விவசாய நில வரப்புகள் கடந்து எடுத்து செல்ல வேண்டும். முறையான வழி இல்லாமல் பொதுமக்கள் பல ஆண்டுகாலமாக அவதியடைந்து வருகின்றனர். முறையான சிமென்ட் சாலை அமைக்க கோரி பல முறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இம்மக்களின் நலன் கருதி மயானத்திற்கு செல்ல சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் மேலும் மயானத்திற்குள் தெருவிளக்கு, மயான சுற்றுசுவர் அமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பிற்கு தீவிர நடவடிக்கை
கோவை, பிப்.24- கோவை ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை திருப்பதி ரயிலில் கடந்த 6 ஆம் தேதியன்று பயணம் செய்த ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை, இளைஞர் ஒரு வர் எட்டி உதைத்து கீழே தள்ளிய சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் என்ப வரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு ரயில்வே போலீஸ் டி.ஜி.பி வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், தமிழ்நாடு முழுவ தும் உள்ள ரயில் நிலையங்களில் பெண் பாதுகாப்பை தீவிரபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டது. இதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில், கோவையில் உள்ள ரயில் நிலையங்களில், ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி பாபு தலைமையி லான போலீசார், அனைத்து நடை மேடைகளுக்கும் நேரில் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். அதேபோல் மகளிர் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் விழிப்புணர்வு நோட் டீஸ்கள் ஒட்டப்பட்டது. மேலும் உடனடி யாக தமிழ்நாடு ரயில்வே போலீஸ் மற் றும் மத்திய ரயில்வே போலீசை தொடர்பு கொள்வதற்கான ஹெல்ப் லைன் எண்கள் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து “ரயில் மடட்” என்ற செயலி செயல் விளக்கம் காட்டப்பட்டது. இது குறித்து பேசிய கோவை ரயில்வே காவல் ஆய்வாளர் மீனாட்சி, தமிழ்நாடு ரயில்வே போலீசார் அனைத்து ரயில் நிலையங்களிலும் பெண் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தான நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளோம். குறிப்பாக கோவை மாவட்டத்தில் “பெண்கள் பாதுகாப்புக் குழு” என தனி குழுவை உருவாக்கி அதில் வழக்கறிஞர்கள், சமூக நல துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் இணைக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு குறித்தும், எங்கெங்கு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்த நபர்கள் முன்னெச் சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். அதேபோல் ஒவ்வொரு ரயிலிலும் உள்ள மகளிர் பெட்டிகளில் ஒரு காவ லர் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மக்கள் அச்சமின்றி பய ணிக்க போதிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் தமிழ்நாடு அரசு மற்றும் ரயில்வே போலீசாரால் செய்யப்பட்டுள் ளது என தெரிவித்தார்.
சொத்து வரி உயர்வு
சொத்து வரி உயர்வு ஈரோடு, பிப். 24- மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பு பொதுமக்களை வாட்டி வதைப்பதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் திங் களன்று பொதுமக்கள் மனு அளித்தனர். அம்மனுவில், ஈரோடு மாவட்டத்தில் திடீரென உச்ச கட்டமான சொத்து வரி விதிக் கப்பட்டுள்ளது. நியாய மற்ற அதிரடியாக விதிக்கப் பட்டுள்ள வரி பொது மக்களை வாட்டி வதைக் கிறது. மேலும், நோட்டீஸ் கிடைத்த 2 நாட்களில் வரி யைக் கட்ட வேண்டும். இல்லையெனில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப் படும் என மிரட்டப்படுகின்ற னர். வரி உயர்வை கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பதிவு புத்தகம் பெறுவதில் அலைகழிப்பு
கோவை, பிப்.24- தமிழ்நாடு கார் வியாபாரி கள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பின், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்டோ கன்ஸல்டண்ட் அண்டு டீலர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் பொதுக் குழு கூட்டம் கோவை ஐ.எம்.ஏ அரங்கில் ஞாயி றன்று நடைபெற்றது. மாநி லத் தலைவர் சிவக்குமார் தலையில் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியா ளர்களிடம் பேசிய அச் சங்கத்தின் தலைவர் சிவக் குமார், தமிழகம் முழுவதும் வாகனப் பதிவு புத்த கத்தை தபால் மூலம் அனுப் பும் முறை காரணமாக, பல் வேறு சிக்கல் ஏற்படுகிறது. அவசர கதியில் வாகன உரி மையாளர் விற்பனை செய் கிறார், அப்போது தடை யின்மை சான்றிதழ், வாகன பதிவு புத்தகத்தை கொடுக் கின்றனர். அதை நாங்கள் நேரடியாக ஆர்டிஓ அலுவ லகம் எடுத்து சென்று வாங்கி வந்தோம். இப் போது தபால் மூலம் அனுப்புவதாக கூறுகின்ற னர். ஆனால் அவ்வாறு பதிவு புத்தகம் வர நீண்ட நாட்கள் ஆகிறது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் மற்றும் துறை சார்ந்த ஆணையரிடமும் கோரிக்கை மனு அளித்துள் ளோம். நேரில் சென்று வாகன பதிவு புத்தகம் பெற சட்டத்தில் இடம் உள் ளது. ஆனால் அதிகாரி கள் அதனை கண்டுகொள்வ தில்லை. விரைவில் துணை முதல்வரை சந்திக்க உள் ளோம். தொடர்ந்து நடவ டிக்கை எடுக்கவில்லை என் றால் அடுத்த கட்டமாக உண்ணாவிரதம் போராட் டம் சென்னையில் நடத்த உள்ளோம் என்றார்.
பொது மக்களின் தேவைக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
அவிநாசி, பிப். 24 – அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் மக்களின் தேவைக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர திங்க ளன்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலை யம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் போன்ற நகரங்க ளுக்கு நூற்றுக்கணக்கானோர் செல்வது வழக்கம். இந் நிலையில் கடும் வெயிலில் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாகப் பேருந்து நிறுத்தங்களில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரி உள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரிக்கை
திருப்பூர்,பிப்.24 - புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து கணக்கெ டுப்பு நடத்தி அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண் டும் என ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி அலுவ லகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலை மற்றும் சட்டப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றன்று ஏஐடி யூசி மாநிலத் தலைவர் எம்.காசிவிஸ்வநாதன் தலைமை யில் நடைபெற்றது. தேசியத் தலைவர் வஹிதா நிஜாம் கருத்த ரங்கைத் தொடங்கி வைத்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளா் சட்டம் 1979 இன்படி, சொந்த மாநிலத்திலும், தமிழகத்திலும் பதிவு செய் யப்படாமல் இருக்கின்றனர். ஊதியம், பணி மற்றும் சமூகப் பாதுகாப்பு, குழந்தைகள் கல்வி உட்பட பல உரிமைகள் மறுக் கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி பட் டியலிட்டு அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய துணைத்தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., நிறை வுரை ஆற்றினார். ஏஐடியுசி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாகன பதிவு புத்தகம் பெருவதில் அலை கழிப்பு போராட்டத்தில் ஈடுபட கார் விற்பனையாளர் சங்கம் முடிவு
கோவை, பிப்.24- வாகன பதிவு புத்தகத்தை ஆர்டிஓ அலுவலகங்களில் நேரடியாக வாங்கிக்கொள்ள அனுமதிக்கக்கோரி கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பின், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்டோ கன்ஸல்டண்ட் அண்டு டீலர்ஸ் வெல்பேர் அசோ சியேஷன் பொதுக்குழு கூட்டம் கோவை ஐ.எம்.ஏ அரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் சிவக்குமார் தலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன பதிவு புத்த கத்தை சட்டப்படி நேரிலும் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சிவக்குமார், தமிழகம் முழுவதும் வாக னப் பதிவு புத்தகத்தை தபால் மூலம் அனுப்பும் முறை காரணமாக, பல் வேறு சிக்கல் ஏற்படுகிறது. அவசர கதியில் வாகன உரிமையாளர் விற்ப னை செய்கிறார், அப்போது தடை யின்மை சான்றிதழ், வாகன பதிவு புத்த கத்தை கொடுக்கின்றனர். அதை நாங் கள் நேரடியாக ஆர்டிஓ அலுவலகம் எடுத்து சென்று வாங்கி வந்தோம். இப் போது தபால் மூலம் அனுப்புவதாக கூறு கின்றனர். ஆனால் அவ்வாறு பதிவு புத்தகம் வர நீண்ட நாட்கள் ஆகிறது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் துறை சார்ந்த ஆணையரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். நேரில் சென்று வாகன பதிவு புத்தகம் பெற சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்வதில்லை. விரைவில் துணை முதல்வரை சந்திக்க உள்ளோம். தொடர்ந்து நடவ டிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக உண்ணாவிரதம் போராட்டம் சென்னையில் நடத்த உள்ளோம் என்றார்.
பெண் குழந்தை சேமிப்பு பத்திரத் திட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு முகாம்
திருப்பூர், பிப். 24 - முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம், இரு பெண் குழந்தைகள் எனில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தின் மூலம் சேமிப்புப் பத்திரம் வழங்கப் படுகிறது. இத்திட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, வட்டியுடன் முதிர்வுத் தொகை வழங்கப்படும். எனவே, திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேமிப்புப் பத்திரம் முதிர்வுத் தொகை பெற வேண்டி விண்ணப்பிக்கா மல் உள்ளவர்கள் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம். பய னாளிகள் சேமிப்பு பத்திரத்துடன், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல்களுடன் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்ப டத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வெள்ளிக்கி ழமை வரை நான்கு நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயன் பெறலாம். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரைதளம் அறை எண்.33 இல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இம்முகாம் நடைபெறுகி றது என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோரிக்கை ஏற்பு: அமராவதி பிரதான வாய்க்காலில் மார்ச் இறுதி வரை தண்ணீர் திறப்பு
உடுமலை, பிப்.24 - அமராவதி பிரதான வாய்க்காலுக்கு உட் பட்ட பகுதிகளுக்கு மார்ச் மாதம் இறுதி வரை தண்ணீர் விட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்ததை ஏற்று, மார்ச் மாதம் இறுதி வரை இப்பகுதிக ளுக்குத் தண்ணீர் விடப்படும் என்று அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. அமராவதி அணை செயற்பொறியா ளரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அமரா வதி பிரதான வாய்க்காலுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இனம் தெரியாத நோய் தாக்குத லால் 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் கருகி விட்டது. வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் அனைத்து பகுதிகளி லும் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறை உயர் அலுவலர்களும் மறு நடவும், விதைப்பும் செய்ய ஆலோசனை வழங்கினர். மார்ச் மாதம் இறுதி வரை அணையில் இருந்து தண் ணீர் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டால். நடவு பயிர் களைக் காப்பாற்ற முடியாது. எனவே மார்ச் மாதம் இரண்டாம் வாரமும், கடைசி வாரமும் 5+5 தினங்களுக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் விட்டு விவசாயிகளின் நெற் பயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம். வீரப்பன், அமராவதி அணை செயற்பொறியா ளரிடம் பிப்.13 ஆம் தேதி கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்நிலையில், அமராவதி ஆற்றில் உள்ள முதல் எட்டு பழைய இராஜவாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) 7520 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கு பிப்.25 முதல் மார்ச் 30 வரை தகுந்த இடைவெளி விட்டு 21 நாட்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக விநாடிக்கு 300 கன அடி வீதம் 544.32 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், அமராவதி புதிய பாசனப் பகுதிகளில் உள்ள 25,250 ஏக்கர் நிலங்களுக்கு பிப்.25 முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை தகுந்த இடைவெளிவிட்டு 10 நாட்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் வழியாக விநாடிக்கு 440 கன அடி வீதம் 380.16 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 924.48 மில்லியன் கன அடிக்கு மிகா மல், அணையின் நீரிருப்பு மற்றும் நீர்வரத்தி னைப் பொறுத்து, தேவைக்கேற்ப, அமரா வதி அணையிலிருந்து, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பாதிக்கப்பட்ட விவசா யிகளின் நலன் கருதியும் கூடுதல் கால அவ காசம் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும், நீர்வளத் துறை அதிகாரிகளுக்கும் விவசாயிகள் சார் பில் நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு விவசா யிகள் சங்க மடத்துக்குளம் தாலுகாச் செயலா ளர் எம்.எம்.வீரப்பன் கூறினார்.
ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி ஈரோட்டில் தடுப்பு பணிகள் தீவிரம்
ஈரோடு, பிப். 24- ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி மற்றும் கர்நூல் பகுதியில் கோழி மற்றும் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் நோய் தீர்க்குதலை ஏற்பட்டதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகைகள் இருந்தாலும் எச்5என்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர் பறவைகள் மற்றும் வனப்பறவைகள் ஆகியவற்றை முக் கியமாக தாக்கும். நோய் பாதித்த பண்ணைகளின் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற் றும் கோழித்தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 65 முட்டை கோழிப்பண்ணை களில் 32.40 லட்சம் முட்டை கோழிகளும், 568 கறிக்கோழி பண்ணைகளில் 27.50 லட்சம் கறிக்கோழிகளும், 56 நாட்டுக் கோழி பண்ணைகளில் 2.30 லட்சம் நாட்டுக்கோழிகளும் உள் ளன. அனைத்து கோழிப்பண்ணைகள், வாத்து பண்ணை கள் மற்றும் புறக்கடை கோழிகளில் எச்சம் மாதிரிகள், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைரஸ் நோய் தாக்கம் குறித்த பரி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தினை தினமும் பார்வையிட்டு பறவைகளில் நோய் அறிகுறி தென்படுகிறதா என ஈரோடு கோழி நோய் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ள 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பிரதிவாரம் திங்களன்று மாவட்ட அளவி லான பறவைக்காய்ச்சல் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகின்றது. எனவே ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சி யர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
சொந்த கட்டிடத்தில் ஆராய்ச்சி மையம்: மாணவர் சங்கம் கோரிக்கை
ஈரோடு, பிப்.24- பாரதியார் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம் சொந்த கட்டி டத்தில் இயங்க ஆவண செய்ய வேண்டும் என மாணவர் சங்கத்தி னர் கோரிக்கை விடுத்து உள்ள னர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலை வர் த.நவீன் வெளியிட்ட அறிக்கை யில், முதுகலை பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண் ணிக்கை சீராக உயர்வதன் காரண மாக ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங் களில் பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையங்களை தொடங்குவதற் கான அரசாணை 2012 ஆம் ஆண் டில் தமிழ்நாடு அரசால் வெளியிடப் பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் பாரதியார் பல் கலைக்கழக முதுகலை விரிவாக்க மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் ‘முன்னேற்றத்திற்கான கல்வி’ (EDUCATE TO ELEVATE) என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இம்மையத் தில் தமிழ், ஆங்கிலம், கணினிப் பயன்பாட்டியல், தொழில் மேலாண்மை, கணிதவியல் ஆகிய முதுநிலை துறைகள் உள்ளன. சரா சரியாக 200 மாணவர்கள் ஆண்டு தோறும் முதுநிலை பட்டம் பெறு கின்றனர். மேலும், முனைவர் பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 12 ஆண்டு களாக செயல்பட்டு வரும் இம் மையத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லை. தொடர்ந்து இடமாற்றம் செய்யப்படுவதால் கற்றல் கற் பித்தலில் இடையூறு ஏற்படுகிறது. இதுவரை மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்ட இம்மையம் தற் போது, பெருந்துறை பழனிசாமி கலைக்கல்லூரி வளாகத்தினுள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. முன்னர் ரூ. 50,000/- ஆக இருந்த மாத வாடகை தற் போது ரூ. 62,500/- ஆக உயர்த்தப் பட்டுள்ளது. வாடகைக் கட்டிடமாக இருப்பதால் கற்பித்தலுக்கான போதிய வசதி வாய்ப்புகளை மேற் கொள்ள முடியவில்லை என்ப தோடு அதற்கான இட வசதியும் இல்லை. மேலும், இம்மையம் எப் போது வேண்டுமானாலும் கைவிடப்படலாம் என மாணவர்க ளும் பொதுமக்களும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. ஏழை - எளிய மக்களின் பட்ட மேற்படிப்புக் கனவை நனவாக்கும் இலக்கோடு செயல்பட்டு வரும் இம்மையத் திற்கு நிரந்தர கட்டிடத்தை அமைத்து தர வேண்டும். பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படு வதற்கென, சிவகிரி சந்தைமேடு அம்மன் கோவில் பகுதியில் பல் கலைக்கழகத்தின் நிதிப் பங்களிப் போடு மாவட்ட நிர்வாகத்தால் ஒரு கட்டிடம் 2016 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது. அக்கட்டடத்தில் 6 வகுப்பறைகள், துறை, அலுவல கம் செயல்படுவதற்கான வசதி உள்ளது. அதனை இம்மையத் திற்கு ஒதுக்குவது தற்போதைக்கு பொருத்தமாக இருக்கும். அன்றி யும், கிராமப்புற மாணவர்களின் போக்குவரத்து உள்ளிட்ட வசதி யைக் கருத்தில் கொண்டு ஈரோடு நகர மையத்தில் புதிய கட்டிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் பரிசீலனை செய்யலாம். ஏராள மான இளைஞர்களின் பட்ட மேற் படிப்பு சார்ந்த நலனைக் கருத் தில் கொண்டு அரசு ஆவன செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரரின் நிலத்தை அபகரிக்க முயற்சி
முன்னாள் ராணுவ வீரரின் நிலத்தை அபகரிக்க முயற்சி தருமபுரி, பிப். 24- தருமபுரி மாவட்டம், சொரகுரிக்கை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி முன்னாள் ரானுவ வீரரின் குடும்பத்திற்கு சொந்த மான நிலத்தை மாற்று நபருக்கு பட்டா செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என ராணுவ வீரர் குடும்பத்தி னர் ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது, நான் இந்திய ராணுவத் தில் பணியாற்றிய ராணுவ வீரர். நான் உழைத்த மொத்த உழைப்பையும் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த தொகை யைக் கொண்டு எனது மனைவியின் பெயரில் நான் கடந்த 2011 ஆம் தேதியன்று 74 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி னேன். மேலும் அன்று முதல் இன்று வரை மேற்படி நிலத் தில் விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், முனிராஜ் மனைவி வெங்கட்டம்மாள் என்ப வர் எங்களுக்கு சொந்தமான நிலத்தை குறித்து போலி ஆவ ணங்களை தயார் செய்து எங்களை நிலத்தை விட்டு வெளி யேற்ற முயற்சித்து வருகின்றனர். நிலத்தை அபகரிப் பவர்களுக்கு துணையாக இதற்கு முன் பணியில் இருந்த தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் எனது மனைவியின் பெயரில் இருந்த பட்டா சிட்டா அவணங்களை ரத்து செய்து கடந்த 18-09-2024-ம் ஆண்டு அக்டோபர் 18 ம் தேதியன்று உத்த ரவு பிறப்பித்துள்ளார். நிலத்தின் அனுபவம் எங்களிடம் உள்ள நிலையிலும், நிலத்திற்கான உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ள நிலை யிலும், நாங்கள்தான் மேற்படி சொத்தில் இருந்து வருகி றோம். ஆகவே மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை ரத்து செய்து எனது மனைவி பெயரில் நிலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.