ஈரோடு, பிப். 24- தமிழ்நாடு முதலமைச்சர் மக்க ளுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம், சோலார் பகுதியில் அமைந்த முதலமைச்சர் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி யில் பங்கேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் சு.முத்துசாமி செய்தியாளர்களி டம் பேசினார். அப்போது, சாதாரண மக்களுக்கு குறைந்தவிலையில் மருந்துகள் என்று முதலமைச்சர் அறிவித்தார். அந்த அடிப்படை யில் திங்களன்று தமிழ்நாடு முதல மைச்சர் துவக்கி வைத்திருக்கிறார். 1000 மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் துவக்கப்பட்டிருக்கி றது. ஈரோடு மாவட்டத்தில் 36 மருந் தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 22 கூட்டுறவு சொசைட்டிகள் மூலமாகவும், 16 தனியார் மூலமா கவும் நடத்தப்படுகிறது. யார் நடத்தி னாலும் முதலமைச்சர் சொன் னதைப் போல மருந்துகளின் விலை யில் சராசரியாக 75 சதவிகிதம் சேமிப்பாக கிடைக்கிற வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சில மருந்துகள் 90 சதவிகித விலை யில் கிடைக்கிறது. சேமிப்பு கிடங்கு அமைத்து மருந்துகளை வைத்து தடையில்லாமல் அத்துனை மருந்துகளும் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. நிச்சய மாக தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும். 216 விதமான மருந்துகள் கிடைப்ப தற்கு வழிவகை செய்யப்பட்டுள் ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா, மாநிலங் களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாக ரத்தினம் மற்றும் கூட்டுறவு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் இதேபோன்று நாமக்கல் மாவட் டம், இராசிபுரம் வட்டம், மங்கள புரம், திம்மநாயக்கன்பட்டி, அத்த னூர் - ஆயிபாளையம் மற்றும் பிள் ளாநல்லூர் ஆகிய முதல்வர் மருந்த கங்களில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவர் மா.மதி வேந்தன், மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் முதல்வர் மருந்தகத்தை துவக்கி வைத்து முதல் விற் பனையை தொடங்கி வைத்தார். சேலம் சேலம் மாவட்டம், சின்னத்திருப் பதி, நகர கூட்டுறவு கடன் சங்க வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் இரா. பிருந்தாதேவி ஆகியோர் முதல்வர் மருந்தகத்தை துவக்கி வைத்தனர். கோவை கோவை மாவட்டம், பாலசுப்பிர மணியம் சாலை, சாய்பாபா காலனி யில் உள்ள முதல்வர் மருந்தகத் தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ் குமார் ஆகியோர் வாடிக்கையா ளர்களுக்கு மருந்துகளை வழங்கி, தொடங்கி வைத்தார்.