districts

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளி ஆசிரியையை கொலை  செய்தவருக்கு கடும் தண்டனை  ஜவாஹிருல்லா வலியுறுத்தல் 

பாபநாசம், நவ.21-  மனித நேய மக்கள் கட்சியின்  தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ரமணி என்னும் ஆசிரியை பள்ளி வளாகத்தி லேயே கொலைச் செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இந்த மாபா தகச் செயலைச்செய்தவரை சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனைவழங்க வேண்டும்.  பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு  உறுதிச் செய்யப்பட  வேண்டும். இனி, இதுபோன்ற சம்பவங்கள், இனி எப்போதும் நடவாத வண்ணம்,  தமிழ்நாடு அரசு உரிய முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அரிட்டாபட்டியை அழிக்க நினைக்கும்  ஒன்றிய அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பாபநாசம், நவ. 22- மனித நேய மக்கள் கட்சியின்  தலைவ ரும், பாபநாசம் எம்.எல்.ஏவுமான  ஜவாஹி ருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்  பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட  அரிட்டாபட்டி யின் கனிம வளங்களைப் பாதுகாக்க வேண்டும்  இந்தப் பகுதியின் முக்கியத்துவம் கருதி ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவ னத்திற்கு ஒன்றிய சுரங்கங்கள் அமைச்ச கம் வழங்கிய உத்தரவை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இத் திட்டத்திற்கு எந்தவித அனு மதியும், இசைவாணையும் வழங்கக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கி றேன்.  சூழல் முக்கியத்துவம் மற்றும் தமிழர் வரலாற்றைச் சுமந்து நிற்கும் அரிட்டா பட்டியை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முயற்சியைத் தடுக்க  உரிய நட வடிக்கையை உடனடியாகத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுபானக் கூடங்களை திறக்கக்கூடாது :  சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, நவ.21-  மனமகிழ் மன்றம் (எப்எல்2) என்ற பெயரில் புதிய மதுபானக் கூடங்களைத் திறக்கக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் வியாழக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் மு. அருணாவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரில் கொடுத்து வலியுறுத்தினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசி யல் கட்சிகளும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைக்க வேண்டும் எனவும், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்க ளுக்கு அருகில் உள்ள கடைகளை மூட வலியுறுத்தியும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றன. போராட்டங்களில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்பட்ட கடைகள் மூடப்பட்ட இடங்க ளுக்கு அருகில் தற்பொழுது மனமகிழ் மன்றம் என்ற பெய ரில் புதிதாக மதுபானக் கூடங்கள் திறக்கப்படுகின்றன. வழக்க மான டாஸ்மாக் கடைகளை விட இந்த மனமகிழ் மன்றங்கள் மாணவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப் gட்டு வருகிறது. இதனால் இளைய சமூகம் மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் ஆபத்து உள்ளது. எனவே, மேற்படி மனமகிழ் மன்றங்களின் எண்ணிக்கை யை கனிசமான அளவில் குறைப்பதோடு, எக்காரணத்தைக் கொண்டும் புதிய மனமகிழ் மன்றங்களை திறக்க அனுமதிக் fக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

மின் இணைப்பு - மனைப்பட்டா 

மேலும், குளத்தூர் தாலுகா தொண்டைமாண்நல்லூரில் காலம் காலமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளின் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். புதுக்கோட்டை தாலுகா செம்பாட்டூர் ஊராட்சியில் குடியிருப்பு மற்றும் சுடுகாட்டுக்கு அருகில் புதிதாக தனியார் கல்குவாரி அமைக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.  செம்பாட்டூர் ஊராட்சி புத்தாம்பூர் நடுத்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளுக்கு மனைப் gட்டா வழங்க வேண்டும். அதேபோல, செம்பாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளிநகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும் என அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கை மனுக்கொடுக்கும் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய  அடையாள அட்டை சிறப்பு முகாம்

பாபநாசம், நவ.22-  பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெற்றது.  பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹி ருல்லா  முகாமைத் தொடங்கி வைத்து, மாற்றுத் திறனாளிக ளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இதில் எலும்பு  முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசோதனை மேற் கொண்டு அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனர்.  இதில், பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, பேரூராட்சி கவுன்சிலர் புஷ்பா, பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்தி வேல், மாவட்டத் திட்ட அலுவலர் ஜான் ஹென்றி, டாக்டர்கள்  அப்துல்கவி, பிரபா, கவிதா, துளசி, பிருந்தா, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, மாவட்டத் தலைவர் சாப்ஜான், வேலு நாச்சியார், லயன்ஸ் கிளப் சாசனத் தலைவர் தில்லை நாயகி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். முகாமில் நூற்றுக் கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.