சென்னை, நவ. 21- தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளனம், சிஐடியு, உரிமைக் கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய மக்களவையில் குரல் எழுப்ப வேண்டும் என மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கடந்த 2014 முதல் புதிய மோட்டார் வாகன சட்ட பரிந்துரை என்ற பெயரில் 1988 மோட்டார் வாகன சட்டத்தை சாலை பாதுகாப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு திருத்தம் செய்ய முற்பட்டது. பல ஆலோசனைகள் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிய அரசு எதையும் ஏற்கவில்லை. புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதனால் மோட்டார் வாகன தொழிலும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மோட்டார் வாகன தொழி லாளர்களின் கோரிக்கைகளை மக்களவை யில் விவாதித்து, புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 திரும்பபெற நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மனுவை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. இதில் சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் வி.குப்புச்சாமி, நிர்வாகிகள் கண்ணன், ஏ.ராயப்பன், பா.பாலகிருஷ்ணன், உரிமைக் கரங்கள் பொதுச்செயலாளர் வெற்றிவேல், நிர்வாகிகள் டி.ரமேஷ், வி.கண்ணன், வாசு தேவன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் வி.ஜெயகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.