districts

img

இரவு நேரக்கடைகளில் காவல்துறை அத்துமீறலை தடுக்க வேண்டும்

சென்னை, நவ. 24 - இரவு நேரக் கடைகளில் காவல்துறை அத்துமீறுவதை தடுக்க வேண்டும் என்று டீக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் 43வது பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று (நவ.24) காமராஜர் அரங்கில் நடை பெற்றது.  அரசு அனுமதித்துள்ள இரவு நேரக்கடைகளில் கூட,  சில நேரங்களில் காவல் துறையினர் அத்துமீறலில் ஈடு படுவதை அரசு தடுக்க வேண்டும். மாநகராட்சி உரி மத்துடன் குப்பை வரியையும் செலுத்தும் நிலையில், குப்பை க்காக அபராதக் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம் பானது. எனவே, அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். வாடகை கட்டிடங்களில் இயக் கும் டீக்கடைகள், வாடகை செலுத்தும்போது 18 விழுக் காடு ஜிஎஸ்டி விதிக்கப்படு கிறது. இதனால் வணிகமும், கட்டிட உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதனை திரும்ப பெற  வேண்டும்.

வணிக உரிமக் கட்ட ணம், தொழில் வரிக்கட்டணம் உயர்வை மறுபரிசீலினை செய்ய வேண்டும். சிறு, குறு கடைகளின் பணி யாளர்கள் மீது தொழில் வரி திணிப்பதை மாநகராட்சி திரும்ப பெற வேண்டும், டீக்கடை, உணவகங்களில் தாக்குதல் நடத்துவோர் மீது  காவல்துறை கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.   நெருக்கடியில் டீ கடைகள் பொதுக்குழுவிற்கு தலைமை தாங்கி பேசிய சங்கத்தின் தலைவர் டி.அனந்தன், “1980ஆம் ஆண்டுகளில் நிலவிய நெருக் கடியை நோக்கி டீக்கடை தொழில் சென்று கொண்டி ருக்கிறது. சொத்துவரி தொட ர்ந்து உயர்த்தப்படுவதால் டீக்கடைகளின் வாடகை உயர்ந்து வருகிறது. மேலும், வாடகைக்கு ஜிஎஸ்டி விதிக் கப்படுகிறது.

இதன்கார ணமாக தொழில் பாதிக்கப் படுகிறது. இதற்கெதிராக ஒன்றிணைந்து போராடு வோம்” என்றார்.  ஜிஎஸ்டி-க்கு எதிராக போராட்டம்  இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசு கையில், “நள்ளிரவு டீக்க டைகளை மூட காவல்துறை நிர்பந்திப்பதை தமிழக அரசு  தடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தி உள்ளோம். சிறு  வணிகர்களும் ஜிஎஸ்டி கட்ட  வேண்டிய நிலை உருவாக் கப்பட்டுள்ளது. இதற்கெதிராக பேரமைப்பு சார்பில் போராட் டம் நடத்தப்பட உள்ளது” என்றார். ஆண்டறிக்கை   பொதுக்குழுவில் ஆண்ட றிக்கையை செயலாளர் இ.விஜயகுமார் (எ) சுந்தர மும், வரவு செலவு அறிக் கையை பொருளாளர் சி.கே.தாமோதரனும் சமர்ப்பித்தனர். ஏவிஏ சோயல் குழும நிறு வனங்களின் தலைவர் ஏ.வி. அனுப், நவோதயா சுரேஷ் பாபு, சென்னை ஓட்டல் சங்க  செயலாளர் பேரா.ஆர்.ராஜ் குமார், டீக்கடை சங்கத்தின் துணைத்தலைவர் கே.டி.கே.அரவிந்தன் உள்ளிட்டோர் பேசினர். நிர்வாகிகள் பொதுக்குழுவையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக டி.அனந்தன், செயலாளராக இ.விஜயகுமார் (எ) சுந்தரம், பொருளாளராக சி.கே.தாமோ தரன் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.