வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி
சென்னை,நவ.24- வங்கக் கடலில் உரு வான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. இது திங்கட்கிழமை (நவ. 25) காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 2 நாட்களில் தமிழ் நாடு-இலங்கை கடற்கரை யை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புய லாக மாறவும் வாய்ப்பு உள் ளது. அப்படி உருவானால் அதற்கு ‘பீன்ஜல்’ எனப் பெயர் சூட்டப்படும். இந்த நிலையில் தமிழகம் நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நவ. 25 முதல் நவ. 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும் பாலான இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சி 3 ஆம் பக்கம்
அரசு பயணவழி உணவகங்களின் பட்டியல் வெளியீடு
சென்னை,நவ.24- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயணவழி உணவகங்க ளின் பட்டியல் போக்குவரத்து துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வெகுதூரம் இயக்கப்படும் பேருந்துகள், பயணத்தின் போது 3 அல்லது 4 மணி நேர இடைவெளியில் உணவுக்காக அங்கீகரிக்கப்பட்ட சாலையோர உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. இதற்காக போக்குவரத்துத் துறை சார்பில், ஆண்டுதோறும் டெண்டர் கோரப்படு கிறது.இதில் கலந்து கொண்டு ஒப்பந்தம் பெறும் உணவகங்களில் மட்டுமே அரசுப் பேருந்து கள் உணவு இடைவேளைக்கு நின்று செல்லும். அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் தங்கள் உணவகத்தில் நின்று சென்ற அரசுப் பேருந்து களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து போக்கு வரத்துக் கழகத்துக்கு உணவகங்கள் செலுத்தி வருகின்றன. ஆனால், ஒப்பந்தம் பெறாத உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதாக பயணிகள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, அங்கீகரிக் கப்பட்ட உணவகங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என போக்குவரத்து ஆர்வலர் கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதன் தொடர்ச்சியாக 52 அங்கீகரிக்கப்பட்ட உணவகங்க ளின் பட்டியல் https://www.arasubus.tn.gov.in/motel.php என்னும் போக்குவரத்துத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
தூத்துக்குடி, நவ.24- ஒட்டப்பிடாரத்தில் ஆன் லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சரவணன் மகன் அருண்குமார் (29). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேலைக்குச் செல்லாமல் அருண்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாராம். இதில் தொ டர்ந்து பணத்தை இழந்து வந்த நிலையில், தற்போது ரூ.20 ஆயிரம் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நவம்பர் 22 வெள்ளியன்று நள்ளிர வில், வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டாராம். சப்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவி யோடு அருண்குமாரை மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென் றார். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள், ஏற்கெ னவே அவர் உயிரிழந்துவிட்ட தாகத் தெரிவித்தனர். இது குறித்து ஒட்டப்பிடாரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.