states

img

ஏழை நாடுகளுக்கு நிதியுதவி என்ற பெயரில் 1.3 டிரில்லியன் டாலர் கடன்

பாகு, நவ.24- 2035ம் ஆண்டிற்குள் வளரும் நாடுகள் அதிதீவிர காலநிலையை சமாளிக்கவும் குறைந்த கார்பன்  உமிழ்வை கொண்ட பொருளாதா ரத்தை அடையவும் 1.3 டிரில்லியன் டாலர்கள் உதவியை பெறும் என்று அஜர்பைஜானில் நடைபெற்ற கால நிலை உச்சி மாநாட்டில் அறிவிக் கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முடிவடைந்த மாநாட்டில் ஏழை மற்  றும் பணக்கார நாடுகளுக்கு இடையே இதுகுறித்து உடன்படிக்கை ஏற்  பட்டுள்ளது. அதன்படி 1.3 டிரில்லி யன் நிதியுதவியில் 300 பில்லியன் டாலர்கள் மட்டுமே வளர்ந்த நாடு கள் குறைந்த வட்டியுடன் கூடிய கட னாக வழங்கும். மீதித் தொகை தனி யார் முதலீட்டாளர்கள், புதை படிம எரிபொருள் உற்பத்தியாளர்கள், அடிக்கடி விமானப் பயணம் மேற்  கொள்பவர்களிடமிருந்து வசூ லிக்கப்படும் சுங்கவரி போன்ற வழி களில் இருந்து திரட்டப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. சூழலியல்  ஆர்வலர்கள் இது ஒரு ஏமாற்று  வேலை என்று கருத்து தெரிவித்  துள்ளனர்.

ஏழை நாடுகளுக்கு துரோகம்

இந்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்த ஆப்பிரிக்க ஆற்றல் மாற்  றத்திற்கான அமைப்பின் இயக்குநர்  மொஹம்மது அடோ, “மூன்றாம் உலக நாடுகளுக்கு இது ஒரு பேர ழிவு. இது காலநிலை மாற்றத்தின்  தீவிரத்தை குறைக்க செயல்படுவ தாக கூறிக் கொள்ளும் பணக்கார நாடுகள் உலக மக்களுக்கும் பூமிக்  கும் செய்யும் துரோகம்” என்றார். பல வீனமான நாடுகளில் வாழும் மக்க ளின் வாழ்வும் வாழ்வாதாரமும் இப்  போதே பேரழிவுக்கு உள்ளாகிறது  என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  இந்த மாநாட்டில் ஒரு சில ஏழை  நாடுகள் கணிசமான ஒரு தொகை யை வளர்ந்த நாடுகள் தங்களுக்கு நேரடியாக வழங்கவேண்டும் என்  றும் இந்தத் தொகையை வளர்ந்து  வரும் இந்தியா போன்ற நாடுகளு டன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்  றும் கடுமையாக போராடின. அவ சரத் தேவை உள்ள நாடுகளுக்கே  அந்த தொகை வழங்கப்பட வேண்  டும் என்று அந்நாடுகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆபத்திற் குள்ளாகும் பலவீனமான நாடு களின் கூட்டணி மற்றும் மிக ஏழை  நாடுகளின் குழுக்கள் கடைசி நாள் கூட்டத்தின் முக்கிய அமர்வை புறக்  கணித்தன. சிறு தீவு நாடுகள் கூட்டணியின்  தலைவர் செட்ரிக் ஷஸ்டர் இது குறித்து பேசும் போது, “எங்களின்  தீவுகள் மூழ்கிக் கொண்டிருக்கின் றன என்பதை நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. ஒரு மோசமான ஒப்  பந்தத்தை வைத்துக் கொண்டு எங்கள் மக்களை நாங்கள் எப்படி சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறீர் கள்?” என்று கேள்வி எழுப்பினார்

டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற சில நாட்க ளுக்குள் இம்மாநாடு தொடங்கி யது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா வின் புதிய அதிபராக வரும் ஜன வரி மாதம் பொறுப்பேற்க உள்ள  டிரம்ப் 2015 பாரிஸ் உடன்படிக்கை யில் இருந்து விலகப்போவதாக ஏற்  கெனவே அறிவித்துள்ளார். வருங் காலத்தில் வளரும் நாடுகளுக்கு வழங்கும் எந்தவிதமான நிதியுத விக்கும் அவர் பெரும் தடையாக இருப்பார் என்று அஞ்சப்படுகிறது.  இந்த சூழ்நிலையில் பல நாடு கள் இப்போது நிதியுதவியை ஒப் புக்கொள்வது பேராபத்து என்று கருதுகின்றன. இந்நிலையில் வளர்ந்த நாடுகள் “இதற்கு மேல் நிதியுதவி செய்யமுடியாது. வருங் காலத்தில் அமெரிக்கா எந்த உதவி யும் அளிக்காமல் போனால் முழு நிதிச் சுமையையும் தாங்களே சுமக்க  வேண்டியிருக்கும்” என்று கருது கின்றன. பொலிவியா, கியூபா, நைஜீ ரியா உள்ளிட்ட நாடுகள் இந்த உடன்படிக்கையை வன்மையாக கண்டித்துள்ளன.

வளி மண்டலத்தை மாசு படுத்தும் பணக்கார நாடுகள்

“பணக்கார நாடுகள் 150 ஆண்டு களாக வளிமண்டலத்தை மாசு படுத்துகின்றன. அவை காலநிலை  மாற்றத்தை குறைக்க 33 ஆண்டு களாக எதையும் செய்யாமல் சுற்றித்  திரிகின்றன. வளர்ந்து வரும் நாடு களுக்கும் ஏழை நாடுகளுக்கும் அறி வுரை மட்டுமே வழங்குகின்றன. “ஆனால் இப்போது டிரம்ப்பின் வரு கையை சுட்டிக்காட்டி வழங்கப்படும்  குறைந்த நிதியுதவி ஏழை நாடு களின் கடன் சுமையை அதிகரிக்க மட்டுமே உதவும். இதை ஏற்கச் சொல்லி ஏழை நாடு களை பணக்கார நாடுகள் நிர்ப்பந்தம் செய்கின் றன” என்று பிரேசிலின் சூழல் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி க்ளோடியோ அஞ்சிலோ கூறினார். மாநாட்டில் ஒரு அசாதாரண நிகழ்வாக சவூதி அரேபியாவின் அதிகாரி ஒருவர் மற்ற நாடுகளின் ஒப்புதல் இல்லாமல் வரைவு திட்ட நகலை திருத்த முயற்சித்தார்.

அமெரிக்கா மீது அதிருப்தி     

“காப் 28 மாநாட்டில் புதை படிம எரிபொ ருட்களை படிப்படியாக குறைப்பது என்ற தீர்மானத்தை எண்ணெய் வளநாடுகள் நீர்த்துப் போகச்செய்ய முயற்சித்தன” என்று பன்னாட்டு எண்ணெய் மாற்றத்திற்கான அமைப்பின் ராமேன் ஐவாலேனன் குற்றம் சாட்டினார். வழக்க மாக காலநிலை உச்சி மாநாடுகளில் தீவிரமாக செயல்படும் அமெரிக்கா இந்த முறை சரிவர செயல்படவில்லை என்று அதிருப்தி நிலவு கிறது. ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் நிதியுதவி என்பது போதுமானதல்ல என்றாலும் பணக்கார நாடுகள் வருங்காலத்தில் நிகழப்போகும் கால நிலை மாற்றத்தின் தீவிரத்தை முதல்முறையாக இந்த மாநாட்டில் உணர்ந்துள்ளன.  ஆண்டுக்கு 100 பில்லியன் என்பதில் இருந்து 300 பில்லியன் டாலர் உதவி என்பது இம்மாநாட்டின் முக்கிய வெற்றி என்று அமெ ரிக்க உலக வள சிந்தனையாளர்கள் அமைப்பின் தலைமைச் செயல் அலுவலர் ஆனி டாஸ் குப்தா  கூறினார். நிதியுதவி அளிக்க முன்வராத பணக் கார நாடுகளும் பேரிடர்களால் அவதிப்படு கின்றன என்பதை அவை இன்னும் உணர வில்லை. முடிவுக்கு வராமல் நீடித்த பேச்சு வார்த்தைகளை வளர்ந்து வரும் நாடுகள் வேண்டுமென்றே நீடித்தன. இத்தகைய மோச மான போக்கை கண்டிக்கும் வகையில் மாநாட் டின் பல பிரதிநிதிகள் மாநாடு முடிவடைய ஒரு நாள் முன்னதாகவே பாகுவில் இருந்து புறப் பட்டனர். கொலம்பியாவில் சமீபத்தில் நடைபெற்ற பல்லுயிர் பெருக்க உச்சி மாநாட்டில் நடந்தது போலவே இம்மாநாட்டிலும் நடந்தால் அது பேரழி வுக்கு வழிவகுக்கும் என்று பல சூழலியலா ளர்கள் அஞ்சினர். அதுபோல முடிவு எதுவும் ஏற்படாமல் மாநாடு முடிந்தது.  சீனாவின் பொறுப்பான நடவடிக்கை  பணக்கார நாடுகள் தங்களுக்குள்ள பொறுப்பை தட்டிக்கழித்ததோடு நிதி வழங்க மறுத்த நிலையில் சீனா தானாகவே முன்வந்து ஏழைநாடுகளுக்கு நிதியுதவி செய்ய முன் வந்துள்ளது. 

இந்தியா ஏற்க மறுப்பு 

கார்பன் உமிழ்வை குறைக்க ஏழை நாடுக ளுக்கு பணக்கார நாடுகள் வழங்க ஒப்புக் கொண்டுள்ள தொகை மிகவும் குறைவானது என்றும் இதை ஏற்க முடியாது என்றும் இந்தியா  கூறியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதிநிதி லீலா நந்தன், இந்த ஒப்பந்தத்தில் வழங் கப்படுவதாக கூறப்பட்ட நிதி மிகவும் குறைவா னது என்று வாதிட்டார். மேலும்,”எங்களால் இதை ஏற்க முடியாது, முன்மொழியப்பட்ட இலக்கு எங்களின் பிரச்சனைகள் எதையும் தீர்க்காது. எங்கள் நாடு தப்பிப்பதற்கு தேவையான கால நிலை நடவடிக்கைகளுக்கு இந்த இலக்கு உகந்தது இல்லை,” என்று அவர் கூறினார். சுவிட்சர்லாந்து, மாலத்தீவு, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கும் ஒப்பந்தம் மிகவும் பலவீனமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் அந்த முடிவு 2025-ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த காலநிலை பேச்சுவார்த்தைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  கால நிலை மாற்றத்தால், ஏழை நாடுகள் அதிக சவால்களை எதிர்கொள்கின்றன. ஆனால் வர லாற்று ரீதியாக, தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை நெருக்கடிகளுக்கு இந்த ஏழை நாடுகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த  நாடுகள் கால நிலை மாற்றத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வழங்கப்படும் நிதியா னது நியாயமாகவும் பாதிப்புகளை எதிர் கொள்ள உதவும் வகையிலும் இருக்கவேண்டும் என்று கருதுகின்றன. இந்நாடுகள் புதைபடிவ எரிபொருளில் இருந்து விலகி புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த உதவும் வகையில் இந்த நிதி இருக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கின்றன. வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள 1.3 டிரில்லியன் டாலர் நிதியுதவி நடைமுறைக்கு வரும் போது மட்டுமே இந்த மாநாடு வெற்றி யா தோல்வியா என்ற முடிவுக்கு வரமுடியும்.