districts

img

அபராதமாக பிடித்த 6 நாள் சம்பளத்தை திரும்ப வழங்கக்கோரி போராட்டம்

கடலூர்,நவ.24-  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் பங்கேற்றதற்காக 6 நாள் சம்பளத்தை அபராதமாக பிடித்தம் செய்ததை நீதிமன்ற உத்தரவுபடி திரும்ப வழங்கக் கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.எல்.சி நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற 39 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதை காரணம் காட்டி அபராதமாக 6 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிஐடியு இடைக்கால தடையாணை பெற்றது. அதைத் தொடர்ந்து, என்எல்சி நிர்வாகம் 22.12.2015 இல் உயர் நீதி மன்றத்தில் தடையாணையை நீக்கி கொண்டது. பிறகு, தடையாணை நீக்கத்திற்கு எதிராக சிஐடியு தொடுத்த மேல்முறை யீட்டு வழக்கில் 6 நாள் அபராத சம்பள  தொகையை தனி கணக்கில் வைக்க உத்திரவிட்டது. 9 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கில் 2004 செப்.18 அன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், என்எல்சி நிர்வாகம் பிடித்தம் செய்த நிர்வாக உத்தரவை ரத்து செய்து, 6 நாள் அபராத சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தர விட்டது. அதன் நகல் ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியாகியது. இதை யடுத்து, அந்த நகலை இணைத்து என்எல்சி தலைவரிடம் சிஐடியு சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. மேலும், ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சருக்கு சிபிஎம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சார்பில் கடிதமும் தரப்பட்டது. இந்த 39 நாள் வேலை நிறுத்த போராட்டம் சிஐடியு மட்டும் நடத்தியது அல்ல. தொமுச, அதொஊச உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் இணைந்து நடத்திய போராட்டத்தில் 12 ஆயிரம்  தொழிலாளர்-ஊழியர்கள் பங்கேற்ற னர். இந்த போராட்டத்திற்கு பிறகு, 7  ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்று  விட்டனர். ஆனால் தற்போது பேச்சு வார்த்தையில் உள்ள தொமுச அதொஊச சங்கங்கள் இது பற்றி வாய் திறக்கவே இல்லை.  “No Work, No Pay” என்ற கோட்பாட்டிற்கு மேல் அபராத சம்பளம்  பிடித்தம் கூடாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்புகளுக்கு மாறாக 6 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று, தொகையை திரும்ப வழங்க என்எல்சி நிர்வாகம் முன்வர வேண்டும், மேல் முறையீட்டுக்கு செல்வதை கைவிட வேண்டும் என்று சிஐடியு சார்பில் நவ.21, 22 ஆகிய தேதிகளில் ஆலை மட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நவ.23 அன்று மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது தலைவர் டி.ஜெய ராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, பொருளாளர் எம்.சீனிவாசன்,  மாவட்ட துணை தலைவர் ஏ.வேல்முருகன் நிர் வாகிகள் வி.குமார், எஸ்.முருகன், பி.புண்ணியமூர்த்தி எஸ்.வேலாயுதம், என்.வீராசாமி, ஜே.சாமுவேல், பி.பழனி வேல், என்.ரமேஷ் காண்ட்ராக்ட்-  சொசைட்டி சங்க பொருளாளர் வேல்முருகன், எம்.அன்பழகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.