tamilnadu

img

சிபிஎம் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக க.ஸ்ரீராம் தேர்வு

திருநெல்வேலி, நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருநெல் வேலி  மாவட்டச்  செயலாள ராக க.ஸ்ரீராம் தேர்ந்தெடுக் கப்பட்டார்.      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   நெல்லை மாவட்ட 24 ஆவது மாநாடு  நவம்பர் 23, 24 ஆகிய தேதி களில் நெல்லை உடையார் பட்டியில் உள்ள வானவில்  மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்க ரன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கு.பழனி, ஜோதி ஆகி யோர் தலைமை தாங்கினர்.  மாநிலச் செயற்குழு உறுப்பி னர்  கே.சாமுவேல்ராஜ் தொடங்கி வைத்து உரை யாற்றினார்.  மாவட்டச் செய லாளர் க.ஸ்ரீராம் வேலை யறிக்கையை சமர்ப்பித்தார். மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநி லக்குழு உறுப்பினர் கே. திருச்செல்வன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்  டில் மாவட்டச்  செயலாள ராக க.ஸ்ரீராம் தேர்ந்தெடுக்  கப்பட்டார்.  மாவட்ட செயற் குழு உறுப்பினர்களாக கே. ஜி.பாஸ்கரன், பி.கற்பகம், ஆர்.மோகன், எம்.சுடலை ராஜ், ஆர்.எஸ்.செண்பகம், பீர் முகம்மது ஷா, கே. மாரிச்செல்வம், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  31 பேர் கொண்ட மாவட்டக்  குழுவும் தேர்வு செய்யப்பட் டது.மாநிலச் செயற்குழு  உறுப்பினர் க. கனகராஜ் நிறைவுரையாற்றினார். மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் எஸ்.கே.செந் தில் நன்றி கூறினார். தீர்மானங்கள் தாமிரபரணி ஆறு மாசு படுவதை தடுக்க நட வடிக்கை எடுக்க  வேண்டும், அனைவருக்கும் சீரான குடிநீர் வழங்க வேண்டும், கங்கைகொண்டான் சிப்காட்   மற்றும் நாங்குநேரி தொழில் நுட்ப பூங்காவில் மேலும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி ஏராளமான வர்களுக்கு வேலை வாய்ப்பு  வழங்க வேண்டும், நெல்லை  மாவட்டத்தில் சாதிய வன்  முறைகளை தடுத்து நிறுத்த  வேண்டும், கந்துவட்டி கும்  பல்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்ட அளவில்  வசிக்கும் இந்து காட்டு நாயக்  கர் உள்ளிட்ட எஸ்.டி. பிரி வில் வரும் மக்களுக்கு உட னடியாக எஸ்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.