states

img

சிபிஎம் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளராக வி.மாரிமுத்து தேர்வு

நாகப்பட்டினம், நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளராக வி.மாரிமுத்து தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட 24 ஆவது மாநாடு நவம்பர் 23,24 ஆகிய தேதிகளில் கீழ்வேளூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு நாகை மாலி, எஸ்.பாண்டி யன்,சி.மாலா ஆகியோர் தலைமை வகித்தனர். அரசி யல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர்  வி.மாரிமுத்து வேலைய றிக்கை சமர்ப்பித்தார். வரவு- செலவு அறிக்கையை வி. சுப்பிரமணியன் சமர்ப்பி தார். மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.வாலண்டினா வாழ்த்துரை வழங்கினார். புதிய மாவட்டக்குழு  மாநாட்டில் 35 பேர்  கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளராக வி.  மாரிமுத்து தேர்ந்தெடுக்கப் பட்டார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள்  நாகை மாலி,  வி.சுப்பிரமணியன், எம்.முரு கையன், ப. சுபாஷ் சந்திர போஸ், டி.லதா, ஏ.வேணு, என்.எம்.அபுபக்கர், ஏ.வடி வேல், கே. சித்தார்த்தன் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுபாதேவி நன்றி கூறி னார்.  தீர்மானங்கள் பொது விநியோகத் திட் டத்தில் செயல்படும் ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் வழங்க வேண் டும்.  தமிழகம் முழுவதும் மாணவர் சங்கப் பேரவை  நடத்த வேண்டும்.  30 ஆண்டு களுக்கு முன்பு தலித் மற்றும்  பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு கட்டிக் கொடுக்கப் பட்ட தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று  வலியுறுத்தியும் நாகை மாவட்ட கடலோரப் பகுதி களில் மீனவர்களை பாது காக்க தவறிய ஒன்றிய மோடி  அரசை கண்டித்தும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.