தூத்துக்குடி, நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக கே.பி.ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 11-ஆவது மாநாடு, நவம்பர் 23, 24 ஆகிய தேதி களில், திருச்செந்தூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கு.ரவீந்திரன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கிருஷ்ணவேணி, இ. சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சுகு மாறன் பேசினார். மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறு முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.ராஜா ஆகி யோர் அறிக்கைகளை சமர்ப் பித்தனர். மாநிலக்குழு உறுப் பினர் பி.சுகந்தி வாழ்த்திப் பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.நூர் முகம்மது நிறைவுரையாற்றி னார். புதிய மாவட்டக்குழு தேர்வு மாநாட்டில் 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக கே.பி.ஆறு முகம் தேர்வு செய்யப்பட் டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக கே.எஸ்.அர்ச்சுணன், ஆர்.ரசல், கு. ரவீந்திரன், இரா.பேச்சி முத்து, எஸ்.அப்பாதுரை, தா. ராஜா, த.சண்முகராஜ், கே. சீனிவாசன், பா.புவி ராஜ், பி. பூமயில், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள தூத்துக்குடி- திருச் செந்தூர் பிரதான சாலை யை போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் வட்டம் கீழ் விளாத்திகுளம் , கத்தா ளம்பட்டி கிராம விவசாயி களின் 553.29 ஏக்கர் நிலங்க ளையும் விளாத்திகுளம் நக ரில் உள்ள சுமார் 21.17 ஏக்கர் நிலங்களில் உள்ள வீடுகள், கடைகள் ஆகியவற்றையும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யும் முயற்சி யை கைவிட வேண்டும், தூத் துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழை வெள்ளப் பெருக்கில் ஏற்பட்ட சேதத் திற்கு உரிய நிவாரணமும் சேதமடைந்த கட்டமைப்புகளை விரைந்து சீரமைக்கவும் வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் வட்டம் கீழ் விளாத்திகுளம் , கத்தாளம் பட்டி கிராம விவசாயிகளின் 553.29 ஏக்கர் நிலங்களையும் விளாத்திகுளம் நகரில் உள்ள சுமார் 21.17 ஏக்கர் நிலங்களில் உள்ள வீடுகள், கடைகள் ஆகியவற்றையும் கோவில் பெயரில் பட்டா மாற் றம் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.