திருச்சிராப்பள்ளி, பிப்.24- தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவுத் துறை சார்பில், தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி, கே.கே.நகரில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருந்தகத்தை பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், திருச்சிராப்பள்ளி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், மண்டலத் தலைவர் துர்காதேவி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சி பகுதி கீழ ஓகையில், இசட்.ஏ.101. ஓகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக, தமிழக முதல்வரால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தினை, மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டு விற்பனையை துவக்கி வைத்தனர். 1000 முதல்வர் மருந்தகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 25 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. அவை களில் 11 கூட்டுறவு சங்கம் மற்றும் 14 தொழில் முனைவோர்கள் மூலமும் திறக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், வருவாய் கோட்டாட்சி யர் சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, பேரூராட்சி மன்றத் தலைவர் மகாலெட்சுமி முருகேசன் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தர மூர்த்தி, நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் டி. லெனின், குடவாசல் திமுக ஒன்றியச் செயலாளர்கள் பா. பிரபாகரன், எஸ். ஜோதிராமன், பொதுக் குழு உறுப்பினர் ஆர். முருகேசன், நகரச் செயலாளர் ஏ.கே.டி. சேரன் மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் கா. குணசேகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.