districts

img

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: கடலோர கிராமமான சந்திரபாடியில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை, நவ.6 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட சந்திரபாடி ஊராட்சியில் வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு  நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு  மையம் மற்றும் கலைஞரின் கனவு  இல்லம் திட்டத்தின்கீழ் கான்க்ரீட் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொ டங்கியுள்ளதையொட்டி, மயிலா டுதுறை மாவட்டத்தில் எடுக்கப்பட் டுள்ள முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஆய்வு செய்து வரும்  நிலையில், தரங்கம்பாடி அரு கேயுள்ள சந்திரபாடி ஊராட்சியில் புயல் பாதுகாப்பு கூடத்தையும், அரசு உயர்நிலைப் பள்ளியையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சந்திரபாடி ஊராட்சி சின்னூர்பேட்டை கிரா மத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை பாடப் புத்தகங்களை வாசிக்க வைத்து ஆய்வு செய்தார். பின்னர்,  எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ்  கற்று வரும் 3 ஆம் வகுப்பு மாண வர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந் துரையாடினார். சந்திரபாடி ஊராட்சியில் கலை ஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 16 பயனாளிகளுக்கு தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தில் கான்க்ரீட் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதையொட்டி, அந்த வீடுகளின் தற்போதைய நிலை  குறித்து ஆய்வு செய்து, பணிகளை  விரைவாக மேற்கொள்ள உத்தர விட்டார்.