districts

img

தொடர் விடுமுறை: உடுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்பூர், ஜன.17- பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி, உடு மலை அருகே உள்ள திருமூர்த்தி மலை, அமராவதி அணை,  சின்னாறு வனப் பகுதி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள்  கூட்டம் அலைமோதியது. உடுமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள  சுற்றுலாத் தலமான திருமூா்த்தி அணை, அமணலிங்கேஸ்வ ரர் கோவில், பஞ்சலிங்கம் அருவி ஆகிய சுற்றுலாத் தலங் களில் ஏராளமான மக்கள் புதன், வியாழக்கிழமைகளில் குவிந் தனர். மக்கள் கூட்டத்தால் திருமூர்த்திமலையில் உள்ள கடை களில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. மேலும், நூற் றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அமராவதி அணைப் பகு திக்கு குடும்பங்களுடன் வந்த மக்கள், அங்குள்ள முதலைப்  பண்ணையை பாா்வையிட்டனர். பின்னர், அமராவதி அணை,  மீன் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாடு - கேரளம்  எல்லையில் உள்ள சின்னாறு வனப் பகுதிக்கு கார், வேன்  மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த ஏராளமான மக்கள்,  இயற்கை அழகை ரசித்து சென்றனர். மேலும், அப்பகுதி யில் உலவிய புள்ளி மான்கள் மற்றும் யானைகளை புகைப்ப டம் எடுத்து மகிழ்ந்தனர்.