districts

img

தோழர் கே.பொன்னுச்சாமியின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம்

திருப்பூர், ஜன.17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினராக, பனியன், பாத்திரம், கைத்தறி, தூய்மைப்  பணியாளர் உள்ளிட்ட தொழிலாளி வர்க்க நலனுக்காக சிஐ டியு மாவட்ட நிர்வாகிகளில் ஒருவராக, கலை இலக்கியப்  படைப்பாளியாக பன்முகத் திறமையுடன் செயல்பட்ட  தோழர் கே.பொன்னுச்சாமியின் 13 ஆம் ஆண்டு நினைவு  தினம் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டக் குழு அலுவலகம் முன்பாக நடை பெற்ற கே.பொன்னுச்சாமி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச்  செயலாளர் பா.சௌந்தரராசன் தலைமை ஏற்றார்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் கே.காமராஜ், மூத்த தலைவர் எம்.ராஜகோபால்  ஆகியோர் கே.பொன்னுச்சாமியின் பணிகளை நினைவு  கூர்ந்து உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கட்சி அணியினர்  திரளாக கலந்து கொண்டு கே.பொன்னுச்சாமிக்கு மலர்  அஞ்சலி செலுத்தினர்.  அதேபோல் திருமலை நகர், நெசவாளர் காலனி கிளை கள் சார்பிலும் நெசவாளர் காலனி கிளை அலுவலகம் முன் பாக கே பொன்னுச்சாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட் டது.