districts

img

ஜன 22 சிறை நிரப்பும் போராட்டம்: காங்கேயத்தில் விளக்கக் கூட்டம்

திருப்பூர், ஜன.17 - தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 15 ஆவது ஊதிய  ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும்,  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22 அன்று திருப்பூ ரில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த சிறை நிரப்பும் போராட்ட விளக்கப் பேரவை கூட்டம்  காங்கேயம் பழைய கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ செந்தூர்  ஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  ஓய்வுபெற்றோர் நல அமைப்பு காங்கேயம் கிளைத்  தலைவர் முத்தப்பன் தலைமையில் நடைபெற்றது. காங்கே யம் ஓய்வு பெற்றோர் நிர்வாகி அர்ஜுனன், திருப்பூர் ஓய்வு  பெற்றோர் நிர்வாகி சுப்பிரமணி, அரசு போக்குவரத்து ஊழியர்  சங்க திருப்பூர் மண்டல பொதுச் செயலாளர் செல்லத் துரை, சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் விளக்கி பேசினார்கள். ஓய்வு பெற்றோரும், பணி யில் உள்ளோரும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மத்திய சங்க நிர்வாகி நடராஜன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து  வைத்தார்.