தஞ்சாவூர், நவ.6 - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக் கட்டளை அமைக்கப் பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னதாகத் தொடங்கப் பட்டு, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் இசை மேம்பாடு உள்ளிட்டவற்றுக்காக 80 ஆண்டு களுக்கு மேலாக சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் தொண்டாற்றி வருகிறது. அச்சங்கத்தின் சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், செட்டிநாட்டு அரசர் டாக்டர் ராஜா சர்.அண்ணாமலை செட்டியார் பெயரில், செவ்வாய்க்கிழமை அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை நிறுவுகைக்காக ரூ.10 லட்சத்தை, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளு வனிடம், தமிழ் இசைச் சங்கத்தின் உதவிச்செயலர் ஏ.ஆர்.நாச்சியப்பன், பெரி யார் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் தங்கராஜ், தமிழ் இசைச் சங்கக் கல்லூரி முதல்வர் முனை வர் மீனாட்சி ஆகியோர் வழங்கினர். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறுகையில், “இந்த அறக்கட்டளை மூலமாக, உலகெங்கும் நகரத்தார் ஆற்றிய தமிழ்த்தொண்டு, தமிழ் இதழியல் துறைக்கு ஆற்றிய பணிகள், பதிப்புத்துறை, கடல் கடந்த வாணிபம் உள்ளிட்ட பொருண்மைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்மொழி மற்றும் தமிழ் இசைத் துறையில் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்ட வல்லுநர் ஒருவருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கல் மற்றும் மாணவர்களுக்கான பயில ரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடு கள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றார். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் தமிழ் வளர் மையத்துடன், தமிழ் இசைச் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. “இதன்மூலம் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் வளர் மையத்தால் நடத்தப் படும் சான்றிதழ், பட்டயப் படிப்புகள் போன்ற வற்றை தமிழ் இசைச்சங்கம் சென்னையில் நடத்தவுள்ளது” என்றார். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பல்கலைக் கழகப் பதிவாளர் சி.தியாகராஜன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பெ.இளையாப் பிள்ளை, வளர் தமிழ்ப்புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன், நிதி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நல்கைப்பிரிவு அலுவலர் த.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.