புதுக்கோட்டை, ஜன.11- புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் புத்தாஸ் இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு நிறுவனம் இணைந்து வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகளில் புதுக் கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவிகள் குழு, கயிறு இழுத்தல் போட்டியில் வட்டார அளவில் முதல் பரிசு பெற்றனர். சிலம்பம் சுற்றுதல் போட்டியில், 10 ஆம் வகுப்பு ச.ஸ்ரீதர்ஷினி இரண்டாம் பரிசும், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 10 ஆம் வகுப்பு து.ஜெகதீஸ்வரன் மூன்றாம் பரிசும், 12 ஆம் வகுப்பு பி.சாதனா சிறப்புப் பரிசும் பெற்றனர். மேனாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்திய மூர்த்தி வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.