districts

திருச்சி முக்கிய செய்திகள்

வெளிநாட்டு வேலை  மோசடி: ஒருவர் கைது

தஞ்சாவூர், ஜன.11-  தஞ்சாவூர் அருகே ஆப்ரகாம் பண்டிதர் நகர்  பகுதி லூர்து நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவரிடம் வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அரிய லூர் மாவட்டம், அழிசிகுடி யைச் சேர்ந்த ஜி.சுரேஷ் (41), கடந்த 2024 ஆக.2 அன்று ரூ.5.19 லட்சம் வாங்கினார்.  ஆனால் சுரேஷ் கூறியபடி, வெளிநாட்டில் வேலை வாங்கித் தராத தால், பணத்தை திரும்பத்  தருமாறு சீனிவாசன் கேட்டார். அதற்கு, சுரேஷ்  ரூ.1.46 லட்சம் கொடுத்து விட்டு, மீதமுள்ள ரூ. 3.73  லட்சத்தை தராமல் மோசடி செய்ததாக கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர்  வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனர்.

போக்சோவில்  முதியவர் கைது

தஞ்சாவூர், ஜன.11- தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி வெங்கடாசலபதி நகரைச்  சேர்ந்தவர் சி.ஜெய சந்திரன் (60). இவர் தற்போது 14 வயதுடைய சிறுமி ஒருவரை 2022 ஆம் ஆண்டிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அச்சிறுமி பள்ளி வகுப்பறையில் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டி ருப்ப தைக் கண்ட தலைமையா சிரியை விசாரித்து, வல்லம் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  இதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப் பதிந்து  ஜெயசந்திரனை கைது செய்தனர்.

போதைப் பொருள்  விற்ற 3 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜன.11- திருச்சி, வயலூர் சாலை அருகே இளை ஞர்களுக்கு போதை பொருள் விற்பனை நடப்பதாக உறையூர் போலீசாருக்கு வெள்ளிக் கிழமை தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்ட னர். இந்த சோதனையில் ராமலிங்க நகர் பூங்கா  அருகே மெத்தபெட்ட மைன் போதைப்பொருள் விற்ற சீனிவாசநகர், கனரா பேங்க் காலனி யைச் சேர்ந்த தனியார்  நிறுவன ஊழியரான பூஜித் (24), அதே பகுதி யில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 2  மாணவர்களான ஈரோடு டீச்சர் காலனியைச் சேர்ந்த ஆல்வின் (23)  மற்றும் திருச்சி, கலெக்டர்  அலுவலக சாலை ராஜா காலனியைச் சேர்ந்த நகுல் தேவ் (21) ஆகிய 3 பேரை உறையூர் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீ சார் கைது செய்தனர்.  இவர்களிடமிருந்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள  சுமார் 20கி போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். அதோடு இந்த போதை பொருட்கள் பெங்களூருவில் இருந்து  கொண்டு வரப்பட்டு திருச்சி மாநகரப் பகுதி களில் விற்கப்பட்டது என  விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இந்த போதை பொருள் விற்பனைக்கு சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் தலைவராக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புதுகை நகரில் சாலை விரிவாக்கப் பணியை இரவு நேரத்தில் மேற்கொள்ள சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜன.11 - பொதுமக்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு புதுக்கோட்டை மாநகரத்தில் சாலை விரிவாக்கப் பணி களை இரவு நேரத்தில் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  புதுக்கோட்டை மாநகரக் குழு கூட்டம்  கணேஷ் தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. நாகராஜன், சு.மதியழகன், மாநகரச் செயலாளர் புதுகை எஸ்.பாண்டியன் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில், “புதுக்கோட்டை யிலிருந்து மேட்டுப்பட்டி, கேப்பறை வழி யாக அறந்தாங்கி செல்லும் சாலை  நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம்  செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை  நகரத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்கள் வாகனங்க ளும், பொதுமக்களும் அதிகமாக வந்து  செல்லும் இடமாக உள்ளன. எனவே, பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் புதுக்கோட்டை  நகரில் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலை விரிவாக்கத்தின் போது குடிநீர் குழாய்களை அப்புறப் படுத்தி மீண்டும் இணைக்கும் பணி களில் புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் அடிக்கடி முரண்பாடுகள் வெடிப்பதாலும் சாலை விரிவாக்கப் பணிகள் தடைபடுவதாகவும் கூறப்படு கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு இடையூறு இன்றி சாலை விரிவாக்கப் பணிகளை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாநகராட்சிக் குட்பட்ட உசிலங்குளம் பகுதியில் உள்ள சிறு மின்விசைத் தொட்டி பல  மாதங்களாக இயங்கவில்லை. காவிரி குடிநீரும் வருவதில்லை. எனவே, அப்பகுதியில் நிலவும் குடிநீர்  தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவ டிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாநகராட்சிக் குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டா கேட்டு 50  ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கடந்த 7 மாதங்களாக பத்திரப் பதிவுக்கான போராட்டமும் நடைபெற்று வருகிறது. காமராஜபுரம் பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க வும், தடையின்றி பத்திரப் பதிவு நடை பெறவும் மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம்  ஜன.24 சென்னையில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜன.11 - சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என ஜெயங்கொண்டத்தில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி  திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் மாவட்ட பொதுக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. செயல் அறிக்கையை மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தாக்கல் செய்தார். கூட்டத்தில் மாநில பிரதிநிதி  சுந்தர்ராஜன் மற்றும் மாநில பிரதிநிதி துரை, மாநில மகளிர்  அணி அமைப்பாளர் கௌசல்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 5% சதவீதம் உள் இடஒதுக்கீடு கேட்டும், சட்டநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். திருக்கோவில்களில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களையும் இசைக் கலைஞர் களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும். முடியெ டுப்பவர்களுக்கே முடி சொந்தம் என்ற நிலையை உருவாக்க  வேண்டும். நலவாரியத்தில் தலைவராகவும், உறுப்பினர்களா கவும் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும். நல வாரியத்தின் உதவித்தொகை மற்றும் ஓய்வூதியத்  தொகையை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் ஜன.24 அன்று கடையடைப்பும், அன்றே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது. இதில் அரிய லூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து  கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.  கிளைச் செயலாளர் வாசு தேவன் நன்றி கூறினார்.

கொன்றைக்காடு அரசுப் பள்ளிக்கு  ஒலிபெருக்கி சாதனங்கள் நன்கொடை

தஞ்சாவூர், ஜன.11 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நன்கொடை யாளர்கள் ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கினர். கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம்  வகுப்பு வரை சுமார் 876 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  இந்நிலையில், பள்ளியின் தேவைக்காக ஆம்ப்ளிபயர், இரண்டு ஸ்பீக்கர், மைக், ரிமோட் கருவி உட்பட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஒலிபெருக்கி சாதனங்களை சென்னை ஆர்.எம்.நேத்ரா எக்ஸ்போர்ட் நிறுவன உரிமை யாளர் தொழிலதிபர் ஆர்.முத்துக்கண்டியர், கீரமங்கலம் பி.கே.வி மிளகாய் மண்டி உரிமையாளர் தொழிலதிபர் பி.கே. வி.பன்னீர், பேராவூரணி ஆர்.எம்.நேத்ரா கடலை பருப்பு கொள்முதல் நிலைய மேலாளர் ஆர்.பி.விநாயகமூர்த்தி ஆகியோர் இணைந்து வழங்கினர்.  ஒலி பெருக்கி சாதனங்களை பெற்றுக் கொண்ட தலைமை  ஆசிரியர் சு.குமரேசன் பள்ளியின் சார்பில் நன்றி தெரி வித்தார்.  இந்நிகழ்வில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி கவிதா விநாயகமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு  உறுப்பினர்கள், கிராமப் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

வாகன ஓட்டிகளுக்கு  தலைக்கவசம் வழங்கல்

முத்துப்பேட்டை, ஜன.11- திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பன்னாட்டு அரிமா சங்கமும், முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் இயக்கமும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தின. இதற்கு அரிமா சங்க தலைவர் இரா. கோதண்டராமன், மூத்த குடிமக்கள் இயக்க செயலா ளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆய்வாளர் கழனியப்பன், சாலை பாதுகாப்பு குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அறிவுரை  வழங்கினார். இதில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 50 பேருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது.

போகிக்கு குப்பைகளை எரிப்பதைத் தடுக்க 51 வார்டுகளிலும் சேகரிப்பு மையம்

தஞ்சாவூர், ஜன.11 -  தஞ்சாவூர் மாநகரில் போகி பண்டிகைக்காக குப்பை கள் எரிக்கப்படுவதைத் தடுக்க 51 வார்டுகளிலும் குப்பை  சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக் கிழமை மாலை தூய்மைப் பணியாளர்கள் 188 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாநகரில் புகையில்லா போகி - மாசற்ற போகி என்பதை வலியுறுத்தும் விதமாக 51 வார்டு களிலும் ஜனவரி 11, 12, 13 ஆம் தேதிகளில் தலா ஒரு  குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்கள், துணிகளை எரிப்பதைத் தடுத்து, சேகரிக்கும் விதமாக இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தலா 2 தூய்மை பணியாளர்கள் நிய மிக்கப்படுவர். பழைய பொருட்கள், துணிகளை அப்புறப் படுத்த விரும்புவோர் இந்த மையத்தில் கொடுத்தால் போதுமானது. மேலும், வீடுகளுக்கு தூய்மைப் பணியா ளர்கள் சென்று சேகரிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படு கிறது. எனவே, பொதுமக்கள் சாலை, பொது இடங்களில்  குப்பைகளை எரிக்க வேண்டாம் என்றார்.

திருநங்கையர் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன.11 - சாதனை புரிந்த திருநங்கையர்கள் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சமூகத்தில் திருநங்கைகள் சந்திக்கும் எதிர்ப்பு களை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்து வருகின்றனர். இத்தகைய திருநங்கையரை கௌரவிக்கும் வகையில், 2025 ஏப்ரல்  15 ஆம் தேதி திருநங்கையர் தினத்தன்று திருநங்கை யருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. விரு தானது ரூ.1,00,000 காசோலை மற்றும் பாராட்டுச் சான்றி தழ் ஆகியவற்றுடன் வழங்கப்படும்.  இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் https://wards.tn.gov.in   31.01.2025-க்குள் பதிவேற்றம் செய்து, பதிவேற்றம் செய்த  உரிய ஆவணங்களுடன் அதற்கான கருத்துருவினை, கையேடாக தயார் செய்து புதுக்கோட்டை மாவட்ட சமூக  நல அலுவலகத்தில் 03.02.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல  அலுவலக தொலைபேசி 04322 222270 மூலமாக தொடர்பு  கொள்ளவும்.  விதிமுறைகள் - திருநங்கைகள் அரசு உதவி பெறாமல்,  தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திரு நங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் அசோக்குமார் எம்எல்ஏ கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.11 - பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தித் தர வேண்டும் என சட்டமன்றத்தில் பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று கேள்வி  நேரத்தின் போது, பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக் குமார் பேசுகையில், “பேராவூரணி பேரூராட்சியை நக ராட்சியாக தரம் உயர்த்தி தரப்படுமா? பேராவூரணி நகரில்  பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர்  வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படுமா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, “பேரூராட்சியை நகராட்சி யாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை.  பேரூராட்சிக்கு வருமானம் இருந்தால், போதிய அளவு  மக்கள் தொகை இருந்தால் பேரூராட்சியை நகராட்சி யாக தரம் உயர்த்தலாம். இந்த ஆண்டு 25 பேரூராட்சிகள்  நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே, போதுமான வருமானமும், 15 ஆயிரத் துக்கும் அதிகமான மக்கள் தொகையும் இருந்தால், பேரா வூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படும். இதேபோல், பல உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டபடி சாலைப் பணிகளோடு கழிவுநீர் வாய்க்கால், மழை நீர் வடிகால் வாய்க்கால் சேர்த்தே இனி  அமைக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங் கப்படும்” என்றார். தரம் உயரும்  பேராவூரணி பேரூராட்சியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், தற்போது சுமார் 30 ஆயி ரத்தையும் தாண்டி இருக்கக் கூடும். மேலும், பேரூராட்சி யின் பல்வேறு வகை வரிவசூல் சுமார் ரூ.3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதை விட குறைவான மக்கள் தொகையும், குறை வான வருமானமும் உள்ள பல பேரூராட்சிகள் நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் முயற்சியால் பேராவூரணியும் விரைவில் நகராட்சியாக தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.