அரியலூர், ஜன.11 - அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்த எம்.காம், பி.எட் பட்டதாரி அழகுதீரன். இவர், குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மண்புழு உர உற்பத்தி யில் இறங்கினார். சோழமாதேவியில் உள்ள ஒன்றிய அரசின் கிரீடு வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் பயிற்சி பெற்று, 5 ஆண்டுகளுக்கு முன்பு ‘சாயில் ஸ்பிரிட்’ என்ற பெயரில் ரூ.50,000 முதலீட்டில் தொழிலைத் தொ டங்கினார். படிப்படியாக சல்லடை, எடை இயந்திரம், பேக்கிங் தையல் இயந்திரம், பிரிண்டர் என தேவையான உப கரணங்களை வாங்கி விரிவுபடுத்தி னார். மண்புழு உரம் தயாரிக்க தென்னை மட்டை, மணல், மாட்டுச் சாணம், இலைத்தழை, காய்ந்த சருகு கள், வைக்கோல் ஆகியவற்றை அடுக் கடுக்காக பரப்பி, சாணக்கரைசல் தெளித்து, 10 நாட்களுக்குப் பிறகு மண்புழுக்களை விட்டு 45-60 நாட்க ளில் உரம் தயாரிக்கிறார். தொடக்கத்தில் விற்பனைக்கு சிரமப்பட்டாலும், வேளாண் அறிவியல் கழக பரிந்துரையால் ஆர்கானிக் விவ சாயிகளிடம் இருந்து ஆர்டர்கள் கிடைத்தன. எறும்பு, எலி தொல்லை, வெயில் படுதல் போன்ற சவால்களை அனுபவத்தின் மூலம் சமாளித்தார். பெரும்பாலும் வெளியூர் விவசாயி களே இதை வாங்குவதை கவனித்து, அமேசானில் விற்பதற்கு ஏற்பாடு செய்தார். தற்போது மாதம் 10 டன்னுக்கும் மேல் மண்புழு உரம் விற்பனையாகி ரூ.50,000 வரை வருமானம் கிடைக் கிறது. கிலோ ரூ.15 விலையில் விற்கப்ப டும் உரம், மொத்த விற்பனையில் டன் ஒன்றுக்கு ரூ.12,000 என்ற விலையில் கிடைக்கிறது. வரும் ஆர்டர்களை சமாளிக்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், 5 பெண் களுக்கு மண்புழு உர தயாரிப்பு பயிற்சி அளித்து, மூலப்பொருட்களையும் வழங்கியுள்ளார். மண்புழு உரத்துடன், தேங்காய் நார், செம்மண், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், டிரைக்கோடெர்மா விரிடி போன்ற பயோ பாக்டீரியாக்கள் கலந்த மண்கலவை தயாரித்து விற்கிறார். பூச்சித் தாக்கு தல் மற்றும் எறும்புகளைத் தடுக்க நீம் கேக் பவுடர், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை தயாரிப்புகளையும் அறி முகப்படுத்தியுள்ளார். ‘சாயில் ஸ்பிரிட்’ பிராண்ட் பிரபல மான பிறகு, பல நர்சரிகள் ரீசேல் செய்ய வாங்குகின்றன. விவசாயிகள் டன் கணக்கில் வாங்குகிறார்கள். ஒரு விவ சாயிக்கே 2 டன் வரை பார்சல் அனுப்பப்படுகிறது. அரசு ஏற்கனவே சில உதவிகள் செய்துள்ளது. தொழிலை மேலும் விரிவுபடுத்த செட்கள் அமைக்க கூடுதல் உதவி தேவை என அழகுதீரன் கூறுகிறார். பெண்கள் வீட்டிலேயே இருக்காமல் இது போன்ற தொழில்களை தொடங்கி குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். இயற்கை விவசாயத்திற்கு இன்றிய மையாத மண்புழு உரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து வெற்றிகரமாக விற்பனை செய்து வரும் அழகுதீரனின் முயற்சி பாராட்டுக் குரியதாக உள்ளது. கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.