மயிலாடுதுறை, ஜன.11 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படை சார்பில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காரைக்கால் கடலோர காவல்படை நிலைய தளபதி சன்டோலா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீன்பிடி பாதுகாப்பு, வாழ்வா தாரம் மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றி னார். தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தரங்கம்பாடி மீன்பிடித் துறை முகம் பகுதி மற்றும் வீதிகளில் மலைவேம்பு, தேக்கு, நாகலிங்கம், மூங்கில், தட்டை பொங்கன் உள்ளிட்ட 15 வகையான சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை காரைக்கால் கட லோர காவல் படை நிலைய தளபதி சன்டோலா, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி ஆகியோர் நட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தனர். மரக்கன்றுகள் நடும் பணியில், தரங்கம் பாடி ஹோப் பவுண்டேஷன் பள்ளி, தூய தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டனர். தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், துணைத் தலை வர் பொன் ராஜேந்திரன், மீனவ பஞ்சாயத்தார் கள் மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.