districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னை சங்கமம் நம்ம ஊரு கலைவிழா கீழ்ப்பாக்கத்தில்  நாளை முதல்வர் தொடங்கிவைக்கிறார்

சென்னை,ஜன.13- பொங்கல் விழாவையொட்டி தமி ழர்களின் பண்பாட்டுப் பெருமை களை பறைசாற்றும் வகையில் நடை பெறும் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி களை திங்களன்று (ஜன. 13 )  முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் தொடங்கி வைக்கிறார். சென்னையில், தை மாதம் தொட க்கத்தில் பொங்கல் திருவிழாவின் போது    ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த மூன்று ஆண்டு களாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கலை நிகழ்ச்சிகள் கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பர நாதர் ஆலயத் திடலில் முதல மைச்சரால் திங்கட்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளன. 1500 கலைஞர்கள் பங்கேற்பு ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில்’ தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500 க்கும்  மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப் பாட்டம், துடும்பாட்டம், பம்பை யாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட் டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லு பாட்டு, கணியன் கூத்து, தெருக் கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவை க்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50  க்கும் மேற்பட்ட  நாட்டுப்புற வடிவங்களை  நிகழ்த்தி  பார்வையாளர்களை பரவசப்படுத் துவார்கள். வெளிமாநில கலைநிகழ்ச்சிகள் இத்துடன் புகழ்பெற்ற செவ்வி யல் மற்றும் மெல்லிசை கலை ஞர்களும் கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர். இவற்றுடன் கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயமுத்தூர், மதுரை, திருச்சி ராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திரு நெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. உணவுத்திருவிழா விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத் திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கை வினைப் பொருட்களைக் காட்சிப் படுத்தி விற்பனை செய்யும் அரங்கு களும் அமைக்கப்பட உள்ளன.  தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக் களை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பார்வையாளர் களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள்  ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’  கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா  அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம். கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா,  கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம்,   கொளத்தூர்  மாநகராட்சி விளையாட்டு மைதானம்,  அம்பத்தூர்எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய  18 இடங்களில் டிசம்பர்14 ஆம்தேதி முதல் 17 ஆம் வரை நான்கு நாட்கள் மாலை  6 மணி முதல் இரவு 9  மணி வரை நடைபெற  உள்ளன.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கான  ஆராய்ச்சி முடிவுகள் வெளியீடு

சென்னை, ஜன. 11 - இந்தியாவில் நீரிழிவு நோய் தாக்கும் நிலையில் உள்ளவர்கள் தினமும் உணவுக்கு முன் இரண்டு முறை 30 கிராம் பிஸ்தா எடுத்துக் கொண்டால் அது ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சென்னை டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவருமான டாக்டர் வி மோகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்   இது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டாக்டர் மோகன் கூறுகையில், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு 12 வார மருத்துவ பரிசோதனையில் காலை உணவு மற்றும் இரவு உணவிற்கு முன் 30 கிராம் பிஸ்தா வழங்கப்பட்டது. அப்போது அதை எடுத்துக் கொண்டவர்களுக்கு உணவுக்குப் பிந்தைய ரத்த குளுக்கோஸ் அளவு குறைந்து இருப்பதும், மேலும், ட்ரைகிளிசரைடுகளில் 10 சதவீதம், இடுப்பு சுற்றளவு மற்றும் பிற கொழுப்புகள் குறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் குறைந்த அளவே இருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு குறித்து சமீபத்தில் ஜர்னல் ஆப் நியூட்ரிஷனில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை  தலைவர்  டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில்,  இந்தியாவில் 13.6 கோடி மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். 10 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர என்றார்.

காணும் பொங்கல்: பாதுகாப்பு பணியில் 16,000 காவலர்கள்

 சென்னை, ஜன. 11- காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை பெருநகர காவல் ஆணையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.1.2025 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களில்  மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 16,000 காவல் அதிகாரிகள். ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணும் பொங்கலை ஒட்டி மெரினா கடற்கரையில் 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் 13 தற்காலிக கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்படும். ஜனவரி 16 காணும் பொங்கலை ஒட்டி சென்னையில் கடலில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

அடிலெய்டு டென்னிஸ் 2025 கீஸ், பெலிக்ஸ் சாம்பியன்

5ஆவது அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர், ஆஸ்தி ரேலிய நாட்டின் அடிலெய்டு நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை நடைபெற்ற மகளிர் ஒற்றை யர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போட்டித் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலா, தரவரிசையில் இல்லாத சகநாட்டு வீராங்கனை   கீஸை எதிர்கொண்டார். போட்டித் தரவரிசையில் இல்லாத வீராங்கனையாக இருந்தா லும் பெகுலாவை விட கீஸ் பலம் வாய்ந்த வீராங்கனை என்ற நிலையில், இறுதி ஆட்டத்தின் முடிவில் 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் கீஸ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5ஆம் இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ், தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோட்ராவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளை யாடிய பெலிக்ஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். முன்னதாக ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போட்டித் தர வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் ஆந்த்ரே - சிமோனே ஜோடி, தரவரிசையில் 2ஆவது இடத்தில்உள்ள ஜெர்மனியின் டிம் - கெவின் ஜோடியை எதிர்  கொண்டது. தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆந்த்ரே - சிமோனே ஜோடி 4-6, 7-6 (7-4), 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளியில்  மரபு உணவு திருவிழா

கிருஷ்ணகிரி, ஜன.11 - கிருஷ்ணகிரி நாளந்தா சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில், அக்ரி சக்தி நிறுவனம் சார்பில் மரபு உணவு திருவிழா பொங்கலுடன் துவங்கியது.  நாளந்தா பள்ளி கல்வி குழுமங்களின் நிறுவனர் கொங்கரசன் தொடங்கி வைத்தார்.கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களிலிருந்து 20 நிறுவனங்களும்,தொழில் முனைவோரும் பங்கேற்றனர்.கருப்பு கவுனி பச்சை மிளகாய் ஐஸ்கிரீம், பனங்கிழங்கு,ராகிமால்ட்,கம்பு கேக். மூங்கிலால் ஆன போர்வைகள்,துண் டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றிருந்தன.  விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு எப்படி விலை நிரணயிப்பது என்பது குறித்து தனியார் நிறுவனத்தினர் விளக்கினார்.பிரபல சித்த மருத்துவர் சிவராமன் நமது உணவு - நமது பெருமை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவர் விக்ரம்குமார் நாளந்தா பள்ளி குழுமங்களின் தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன் இயக்குநர்கள் வழக்கறிஞர் கவுதம்,மருத்துவர் புவியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகப்புத்தாள், விடைத்தாள் இணைக்கும்  பணியை ஆசிரியர்கள் மீது தீணிக்காதீர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜன 11- அரசு பள்ளிகளில் பொது தேர்வின் போது,  முகப்புத்தாள் விடைத்தாளோடு இணைக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரி யர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று   தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம்  வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் சா.ஞான சேகரன் அறிக்கையில்,  பொது தேர்வின் போது,  முகப்புத்தாள் விடைத்தாளோடு இணைக்கும் அல்லது தைக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது, ஒப்பந்தக்காரர்களே செய்து முடித்து பள்ளிகளுக்கு நேரடியாக விநி யோகம் செய்யப்பட வேண்டும்   காடா துணி உள்ளிட்ட எழுது பொருள்கள் சுமார் 500 பேர் எழுதும் தேர்வாளர்களைக் கொண்ட ஒவ்வொரு வகுப்பு (10, 11, 12) தேர்விற்கும், ஒரு தேர்வு மையத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகிறது அதனை தேர்வு துறையே 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புக்களுக்கு சேர்த்து தேர்வுகளுக்கும் ரூ.30 ஆயிரம் வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சுமார் 500 தேர்வாளர்களைக் கொண்ட ஒவ்வொரு வகுப்பு மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும்  30 ஆண்டுகளாக உயர்த்தப்படாத சில்லரை செலவீனத்தை  பத்தாயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஓசூரில் 35 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

கிருஷ்ணகிரி, ஜன.11- ஓசூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 35 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் அதிரடியாக மீட்கப்பட்டது.  மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சென்னத்தூர் கிராமம்,சீதாராம்மேடு பகுதியில் தனியார் காலனியில, அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவில் 37,750 சதுர அடி பரப்பளவில் சுமார் 35 கோடி மதிப்புள்ள பூங்காவான பொது உபயோகம் மற்றும் சிறுவர் விளையாடும் இடத்தை 41 தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே மாநகராட்சியால் அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் முன்னிலையில்  ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டது. மேலும், இந்த இடத்தினை பாதுகாப்பதற்காக உடனடியாக முள்கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. மீட்பு பணியின் போது மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உடன் இருந்தனர்.