கரூர், ஜன.11 - கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத் திற்குட்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் நடவ டிக்கை எடுக்காமல் மனுக்களை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், கோரிக்கை மனுக்கள் மீது உடனே தீர்வு காண வேண்டும். விவசாய நிலங்கள், வீட்டுமனை நிலங்கள் உள்ளிட்ட இடங்களை அளந்து கொடுத்திட, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள சர்வேயர்களுக்கு ‘அளந்து கொடுப்பதற்கான பணம்’ கட்டியும், பல மாதங்களாக நிலத்தை அளந்து கொடுக்கா மல் காலம் தாழ்த்துகின்றனர். நிலத்தை அளந்து கொடுத்து பொதுமக்கள் விவசாயி களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஏ. நாகராஜன் தலைமை வகித்தார். விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கந்த சாமி, மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி. சரவணன், மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிர மணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர் வி.நாகராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.