districts

img

தந்தை பெரியார் இல்லை என்றால் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியிருக்க முடியாது! திருச்சியில் துரை.வைகோ எம்.பி., பேட்டி

திருச்சிராப்பள்ளி, ஜன.11 - திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலு வலகத்தில் சனிக்கிழமை பொங்கல் விழாவை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சமூகநீதி, பெண்கள் உரிமை, எல்லா ருக்கும் எல்லாம் என்ற அனைத்தையும் தந்தை பெரியார் கொண்டு வந்ததால்தான், தமிழகம் இன்று முன்னேற்றம் அடைந்து உள்ளது. இதற்கு தந்தை பெரியாரே காரணம். இதை யாரும் மறுக்க முடியாது. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு இது தெரிய வாய்ப்பில்லை.  தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்கள் என  அனைவரும் தற்பொழுது முன்னேறி உள்ளார்கள் என்றால், அதற்கு பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை காரணம். தமிழ் தேசியம் தவறான விஷயம் இல்லை. ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தந்தை  பெரியாரை கொச்சைப்படுத்துவது வேதனை யான விஷயம். தமிழகம் முழுவதும் திராவிட இயக்கங்கள் இதனை கண்டித்துள்ளன.  60-க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது பதியப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் போன்ற  இயக்கங்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். நாம் தமிழர் இயக்கம் இதை செய்வது வேதனையாக உள்ளது. சீமானுக்கும் நாம்  தமிழர் இயக்கத்திற்கும் இது தகுந்தது அல்ல. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா  ஆகியோர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  பெரியாரைக் கொச்சைப்படுத்துவதில் சீமானுக்கும் அண்ணாமலைக்கும் போட்டி இருக்கிறது. இது மிகவும் வருத்தமான விஷயம். தந்தை பெரியார் இல்லை என்றால் அண்ணாமலை ஐபிஎஸ்-ஆக ஆகி யிருக்க முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தற்போது தண்டனை கடுமை ஆக்கப்பட்டுள்ளதை நான் வர வேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.