districts

img

சர்க்கரை நோயால் ஏற்படும் பார்வை இழப்பை மீட்க முடியாது!

திருச்சிராப்பள்ளி, ஜன.11 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டத் திற்கு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சின்னச்சாமி வரவேற்றார். மாநிலச் செயலாளர் செந்தமிழ் செல்வன்,  மாவட்டச் செயலாளர் மதிவாணன் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில், மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் ஷிபு வர்க்கி  பேசுகையில், “சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு ஏற்படும். இதனால் பார்வை போய்விட்டால் திரும்ப கொண்டு வர முடியாது. எனவே ஆண்டுதோறும் கண்  பரிசோதனையை அவசியம் செய்ய வேண்டும். லேசர் அறுவை சிகிச்சை செய்வ தன் மூலம் மூன்று நாட்களிலேயே இயல்பான  வாழ்க்கைக்கு திரும்ப முடியும். மேலும் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை சிறந்தது. இந்த அறுவை சிகிச்சைகளை இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலம் செய்து கொள்ளலாம்” என்றார். பின்னர் ஓய்வூதியர்களின் சந்தே கங்களுக்கு பதில் அளித்தார். கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது நிறைவான ஓய்வூதியர்களுக்கு கூடுதல்  ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக  அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக் கும் பொதுத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற வர்களுக்கு குறைந்தபட்சம் ரூ 7850/- வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு நடை முறையை எளிமைப்படுத்த வேண்டும். காப்பீட்டில் காசில்லா மருத்துவம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் துளசிராமன் நன்றி  கூறினார்.