districts

ஊராட்சி மன்ற தலைவர்களை கொடியேற்ற விடாமல் குழப்பம் ஏற்படுத்தினால் நடவடிக்கை ஆட்சியர் எச்சரிக்கை

திருவாரூர், ஆக.13 -  இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி ஒன்றிய மற்றும் மாநில அரசு உத்தரவுகளின்படி திரு வாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15  ஆம் தேதி வரை தேசியக் கொடியினை பறக்க விட வேண்டும்.  ஆக.15 ஆம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற  அலுவலகங்களிலும் சம்பந் தப்பட்ட ஊராட்சி மன்ற தலை வர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.  ஊராட்சிகளில் தேசியக் கொடியை ஏற்றுவது தொடர் பாக பிரச்சனை இருந்தால் 9444178000 என்ற ஆட்சிய ரின் செல்போன் எண்ணி லும், ஊராட்சிகள் உதவி  இயக்குநர் - 74026 07518 செல்போன் எண்ணி லும் புகார் தெரிவிக்கலாம்.  மேலும் தேசியக்கொடி யினை அவமதிப்பு செய்ப வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என வும் அவர் தெரிவித்துள்ளார்.