districts

img

ரேசன் பொருட்கள் பற்றாக்குறை நியாய விலை கடைகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம், ஜூன் 1- நியாய விலைக் கடையில் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். விழுப்புரம் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாமாயில் முறையாக வழங்கப்படுவதில்லை பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கூட்டுறவு துணைப் பதிவாளர் (உணவு விநியோகப் பிரிவு) அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, நியாய விலைக் கடைகளுக்கு மாதந்தோறும் உணவுப் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா? என பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் பாமாயில் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில்,“ நியாய விலைக் கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை கூட்டுறவு மற்றும் வழங்கல் துறையினர் உறுதி செய்ய வேண்டும்” என்றார். மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத் துறையினர் நியாய விலைக் கடை களுக்கு பொருட்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றும் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதை கண்டறிந்தால் முன்கூட்டியே தேவையான அளவை பதிவுசெய்து பொருட்களை வாங்கி கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  நியாய விலைக் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை என பொது மக்கள் மீண்டும் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வும் ஆட்சியர் எச்சரிக்கை செய்தார். இந்த ஆய்வின்போது, மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்க ளின் மண்டல இணைப் பதிவாளர் பால முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி ஆகியோர் உடனிருந்தனர்.