திருப்பூர், ஜூன் 24- திருப்பூரில் ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள், நிறுவனங்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தாவது, கொரானா வைரஸ் தொற்று நோய் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 27 ஆம் தேதி யன்று வெளியிட்ட அறிவிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கி கள், வணிக வங்கிகள், நிறுவனங்கள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங் கள், வீட்டு வசதி நிறுவனங்கள் உள்பட அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன் தவணை தள்ளிவைப்பு காலம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு மாறாக கடன்தாரர்கள் தவணைத் தொகையை செலுத்திட வங்கிகள், நிறுவனங்கள் சார்பில் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வரப்பெறுகின்றன. எனவே திருப்பூரில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கி கள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.