tamilnadu

மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

கோவை, ஜூலை 7- மனித கழிவுகளை மனிதனே அள்ள தடை சட்டத்தை மீறி  செயல்படுவோர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி விடுத் துள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது, மனித கழிவு களை மனிதனே அள்ளுவதைத் தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 தற்போது அமலில் உள்ளது. இச்சட்டப்பிரிவு 7-ன்  படி அபாயகரமான கழிவுநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது. இதை மீறுவது இச்சட் டப்பரிவு 9-ன் படி தண்டனைக் குரிய குற்றமாகும்.  இச்சட்ட விதிகளின் படி, எங்கெங்கு மனிதர்களை பயன் படுத்துவது முற்றிலும் தவிர்க்க இயலாதோ, அவ்விடங்களில் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதியினை முன்கூட் டியே எழுத்து வடிவில் பெற்று  அவர்களை உரிய பாதுகாப்பு டன் பயன்படுத்த வேண்டும். இதன்படி தனிநபரோ உள்ளாட்சி அமைப்போ, முகமையோ தங்க ளின் ஊழியரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதக் கழிவு தொட்டி மற்றும் கழிவுநீர் கால்வாயினை சுத்தம்  செய்யும் பணிக்குப் பயன்படுத் தக்கூடாது. உள்ளாட்சி அமைப் புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் கருவிகள், உபகரணங் களைக் கொண்டு தான் மனிதக்  கழிவு தொட்டியைக் கழுவும் பணியை மேற்கொள்ள வேண் டும். தனி நபர்களும் தங்கள் வீடு களில் உள்ள கழிவுநீர் தொட்டி களில் மனிதர்களை இறக்கி விட்டு  சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளக்கூடாது. இதற் காக தனியார் நிறுவனங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்த லாம். கால்நடைகள் வளர்ப்பு இடங்களிலும் கால்நடைகளின் கழிவுகளை அகற்றுவதற்கு மனி தர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதை முறையாகக் கண்காணிக்க நகராட்சி ஆணை யாளர்கள், மாநகராட்சி ஆணை யர்கள், அனைத்து வட்டாட்சி யர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பேரூராட்சியின் செயல்அலுவலர்கள் ஆகியோ ருக்கு தக்க அறிவுரைகள் வழங் ்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தினை மீறி மனிதர்களை மேற்படி  பணிகளுக்கு பயன்படுத்து வோருக்கு இரண்டாண்டு சிறை  தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு சட்டத் தினை மீறி மனிதர்களை மேற்படி பணிகளில்  ஈடுபடுத்துவோர், பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவ ரது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10லட்சம் வழங்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.