திருவள்ளூர்,நவ23- திருநின்றவூரில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளியின் தாளாளர் வினோத்தை போஸ்கோ சட்டத்தில் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திரு நின்றவூர் பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் ஏஞ்சல் என்ற தனி யார் பள்ளியில் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியின் தாளாளர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி சக மாணவர்களிடமும், பெற்றோரிடமும் இதை தெரி வித்ததை அடுத்து புதனன்று (நவ. 23) காலை பெற்றோர், உறவினர் கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட் டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாளாளர் வினோத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வகுப்பறையை புற கணித்து உள்ளிருப்பு போராட்டத்தி லும் அவர்கள் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சகாதேவன், ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோரிடம் பேச்சு நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆவடி அனைத்து மகளிர் ஆய்வாளர் லலிதாவும் விசாரணை நடத்தினார். அப்போது பெற்றோர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத் என்பவர் மாணவர் ஒருவரை தள்ளி விட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து 200க்கும் மேற்பட்டபள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் முழக்கங்களை எழுப்பி பள்ளியின் பாலியல் சீண்ட லில் ஈடுபட்ட வினோத்தை உடனடி யாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆவடி வருவாய்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசா ரணை நடத்தினர். திருநின்றவூர் காவல் துறையினர் சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சூழலில் வினோத் கோவாவில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் தாளாளரும் அவரது தந்தையுமான ஜெயராமனை காவல்துறையினர் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்ற னர். இந்த நிலையில் வினோத்தை போஸ்கோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆ.டிக்சன், மாநிலக்குழு உறுப்பி னர் லட்சுமி ஷெகால் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.மதன், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சசிகலா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இந்தபோராட்டத்தில் மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பச்சையம்மாள், சிபிஎம் பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ெஜ.ராபட் எபிநேசர், மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.தேவேந்திரன், மாணவர் சங்க கிளைச் செயலாளர் சி.தமிழர சன், கிளைத் தலைவர் செ.காவியா, ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர் போராட்டத்தின் விளைவாக வினோத் மீது திருநின்றவூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.