districts

img

மீஞ்சூர்-மணலி நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி சிபிஎம் மறியல்

திருவள்ளூர், ஜன.2- மீஞ்சூர், மணலி வரை யிலான நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் முதல் மணலி வரை உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலை சுமார் 30 கி.மி. தூரம் மரண குழி களாக மாறியுள்ளது. இரு புறமும் சாலைகளில் தொழிற்சாலைகளுக்கு கரி ஏற்றி வரும் லாரிகள், கனரக வாகனங்கள், அரசு பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள் என இரவு, பகலாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல் கின்றன. சாலைகளில் கரி துகள்களின் தூசி  மண்டலமாக மாறியுள்ள தால், மக்கள் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அங் காங்கே பள்ளங்கள் உருவாகியுள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலையை சீரமைக்காததால் தினம் விபத்துகள் ஏற்படுவதோடு,  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மணி கணக்கில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு  சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிச 31 அன்று மீஞ்சூர் பிடிஒ அலுவலகம் அருகே சாலை மறியலில் நடைபெற்றது.பின்னர் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர், தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடை பெற்றது. அப்போது ஜனவரி 2 முதல் சாலையை  சீரமைக்கும் பணி மேற் கொள்ளப்படும் என தெரி விக்கப்பட்டது. போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.விஜயன், ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய செய லாளர் இ.ெஜயவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜி.வினாயகமூர்த்தி, நரேஷ் குமார், செந்தில்குமார், ெஜய்கணேஷ், கவிதா, எம்.வி.நக்கீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.