திருப்பூர், மே 6- கொரோனா பொது முடக்கம் காரணமாக இரண்டு ஆண்டுகள் ரத்து செய்யப்பட்ட தற்கு பிறகு 2022 கல்வி ஆண்டுக்கான பத் தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு வெள்ளி யன்று தொடங்கியது. மாணவர்கள் ஆர் வத்துடன் தேர்வில் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் நடத்தப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 6 ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருப்பூர் மாவட் டம் முழுவதும் 108 மையங்களில் 358 பள்ளி களில் பயிலக்கூடிய 31 ஆயிரத்து 617 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 646 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 263 மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுது கின்றனர். இதையொட்டி முதன்மைக் கண்காணிப் பாளர்களாக 108 தலைமை ஆசிரியர்களும், 108 துறை அலுவலர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக 1780 ஆசிரியர் களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுத் தேர்வுக்காக முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக 157 ஆசிரியர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டியவர் களில் முதல் நாளில் மொத்தம் 29,908 பேர் தேர்வு எழுதியுள்ளனர் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.