districts

ஸ்டவ் வெடித்ததில் இளம்பெண் மரணம்

தூத்துக்குடி, ஏப்.10- தூத்துக்குடியில் ஸ்டவ் வெடித்ததில் பலத்த தீக்காயம் அடைந்த சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  தூத்துகுடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் முத்த ரசி (19). கடந்த 28ம் தேதி காப்பி போடுவ தற்காக முத்தரசி, ஸ்டவ் அடுப்பில் ஏர் அடித்து விட்டு பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்ததில் பலத்த தீக்கா யம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சனியன்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.