tamilnadu

img

கும்பலால் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட உ.பி. மாநில இளம்பெண் மரணம்

மக்கள் கொந்தளிப்பு-பாஜக அமைச்சர்களை முற்றுகை

லக்னோ, டிச.7- கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து, எரிக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநி லம் உன்னாவ் கிராம இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் கிரா மத்தில் ஒரு கும்பலால் 23 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார். இதுதொடர்பான வழக்கில் நீதி மன்றத்தில் ஆஜராவதற்காக அந்த இளம் பெண் சென்றுள்ளார்.அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தூக்கிச் சென்று தீவைத்து எரித்தது. இளம்பெண் பலத்த தீக்காயங்களுடன் உதவி கோரி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உடலில் தீப்பற்றிய நிலையில் ஓடிய தாக கூறப்படுகிறது. 

90 சதவீத தீக்காயங்களுடன் அந்த பெண்ணை மீட்ட போலீசார் லக்னோவி லுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர்  ஏர் ஆம்புலன்ஸ் மூலம் தில்லி சப்தார்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், வெள்ளிக்கிழமையன்று இரவு 11.40 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்ட தால் உயிரிழந்தார். முன்னதாக அந்த பெண், தான் வாழ வேண்டும். தனக்கு நேர்ந்த கொடு மைக்கு காரணமானவர்கள் மன்னிக்கப் படக் கூடாது. தூக்கிலிடப்பட வேண்டும் என கூறியதாக அவரது சகோதரர் தெரி வித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது.  

விசாரணை முடிந்து குற்றவாளிகளை ஒரே மாதத்திற்குள் தூக்கிலிட வேண்டும் என்று தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.  இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்று மாநில முதலமைச்ச்ர யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் போராட்டம்

உன்னாவ் பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேச தலை மைச் செயலகம் முன்பு சனிக்கிழமையன்று தர்ணாவில் ஈடுபட்டார். 

பாஜக அமைச்சர்களுக்கு எதிர்ப்பு

இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, உத்தரப்பிர தேச ஆளும்கட்சி  பாஜக அமைச்சர்களான சுவாமி பிரசாத் மயூரா, கமல் ரானி மற்றும் உள்ளூர் எம்.பி சாக்ஷி மகராஜும் சென்ற னர்.அவர்கள் வந்த காரை  மாணவர்களும் மக்களும் முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மோடிக்கு ராகுல் கேள்வி 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடை பெற்ற கூட்டத்தில் பேசுகையில், உலக அளவில் இந்தியா பலாத்கார தலைநக ராக பார்க்கப்படுகிறது. பெண்குழந்தை களையும், சகோதரிகளையும்  இந்தியா வால் ஏன்  பாதுகாக்க முடியவில்லை என்று உலக நாடுகள் கேட்கின்றன.  உத்தரப்பிர தேசத்தில் பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார். உன்னாவ் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.