தூத்துக்குடி, ஜன.17 நாலுமாவடியில் ரெடீமர்ஸ் சுழற் கோப்பை கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி.அணி வெற்றி பெற்று ரெடீமர்ஸ் சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. தூத்துக்குடி மாவட்டம், நாலு மாவடி இயேசு விடுவிக்கிறார் விளை யாட்டுத் துறையும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகமும் இணைந்து 7-ஆம் ஆண்டு “ரெடீ மர்ஸ்” கோப்பைக்கான மாநில அளவி லான தமிழர் திருநாள் மின்னொளி கபாடி போட்டியை ஜன.15 ,16 ஆம் தேதிகளில் நடத்தினர். போட்டிகள் நாலு மாவடி காமராஜ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் சர்வதேச தரத்தில் “மேட்” தளத்தில் தினமும் பிற்பகல் 3 மணியளவில் துவங்கியது. போட்டிகளில் தமிழகத்தின் தலைச் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் போட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவ னர் சகோ. மோகன் சி லாசரஸ் தலைமை யில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதா கிருஷ்ணன் துவக்கி வைத்தார். 2வது நாள் போட்டியை அஷ்லி மிராக்ளின், கிளமெண்ட் எபனேசர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நாலுமாவடி ஜெ.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்கள் அணிக்கு ரூ.50,ஆயி ரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், இரண்டாம் இடத்தைப் பிடித்த அனத்தங்கரை அணிக்கு ரூ.30 ஆயி ரமும், மூன்றாம், நான்காம் பரிசாக தூத்துக்குடி கரிகாலன், என்.எப்.சி. அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்தி ரம் எஸ்.எம்.வி.கே.சி. பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயி ரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாங்காபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.30 ஆயி ரமும், திண்டுக்கல் சக்தி கல்லூரி, திருநெல்வேலி பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் மூன்றாம் நான்காம் பரிசை பெற்று தலாரூ.20 ஆயிரத்தை தட்டி சென்றனர். விழா நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கினார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத் துறை ஒருங்கி ணைப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். ரொக்கப் பரிசையும் ரெடீ மர்ஸ் சுழற்கோப்பையையும் தூத்துக் குடி தெற்கு மாவட்ட அதிமுக செய லாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.