districts

img

தஞ்சாவூரிலிருந்து ஹூப்ளிக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை ச.சு.பழநிமாணிக்கம் எம்.பி. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்

தஞ்சாவூர், மார்ச் 22-  தஞ்சாவூரிலிருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வாராந்திர ரயில் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கி யது. இதில் பயணம் செய்த பயணிகளுக்கு தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம் இனிப்பு களை வழங்கினார். தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வாரந்தோ றும் ஹூப்ளி-தஞ்சாவூர் இடையே வாராந்திர சிறப்பு யிலை அறிமுகப்படுத்தியது. இந்த ரயில் திங்கள்கிழமை ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.  பின்னர் தஞ்சாவூரிலிருந்து ஹூப்ளிக்கு புறப்பட்ட ரயில் பயணிகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சியில் தஞ்சாவூர் எம்பி. ச.சு.பழநிமாணிக்கம், மேயர் சண்.ராம நாதன், ஆணையர் சரவணக்குமார், திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.