தஞ்சாவூர்/திருச்சிராப்பள்ளி, ஆக.26 - மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள், தொழிலாளர், விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தும் விதமாக, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம், பொது மக்களை சந்தித்து துண்டு பிரசு ரங்களை வழங்குதல் உள்ளிட்ட தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம், ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர். பூதலூர் வடக்கு ஒன்றியம், பாத ரக்குடி, செய்யாமங்கலம், மாற னேரி, மைக்கேல்பட்டி, அகரப் பேட்டை, கச்சமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இயக்கத் திற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் கலந்து கொண்டனர், சேதுபாவாசத்திரத்தில் ஒன்றி யம், மணக்காடு, பெரியகத்திக் கோட்டை, கொரட்டூர் ஆகிய இடங்க ளில், மக்கள் சந்திப்பு இயக்கமும், ரெட்டவயலில் தெருமுனை பிரச்சார மும் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.எம். வீரப்பெருமாள், மூத்த தோழர்கள் வீ.கருப்பையா, ஆர்.எஸ்.வேலுச் சாமி, தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். பூதலூர் தெற்கு ஒன்றியம் செங்கிப் பட்டி, ஆவாரப்பட்டி, முத்து வீரகண்டியம்பட்டி, பூதலூர் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ் செல்வி கலந்து கொண்டனர். ஒரத்த நாடு ஒன்றியம் மண்டலக்கோட்டை, வடக்கு கோட்டை, ஆயங்குடி ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், ஒன்றி யச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர். அம்மாபேட்டை ஒன்றியத்தில், அம்மாபேட்டை, கோவிலூர், மேல மாகாணம், நெல்லித்தோப்பு, கோனூர் உள்ளிட்ட இடங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது. இதில், ஒன்றியச் செயலா ளர் ஏ.நம்பிராஜன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதிக் குழு சார்பில் திருவெறும்பூர் கக்கன் காலனியில் மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா தலைமையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இயக்கத்தில் மூத்த தோழர் கே.சி. பாண்டியன், காட்டூர் பகுதி செயலா ளர் மணிமாறன், கிளைச் செயலா ளர் நாகூர்மைதீன், செந்தில்குமார், எலிசபெத்ராணி, ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.