தஞ்சாவூர், ஜூன் 18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முதன்மைச் சாலையில் உள்ள இரு மதுபானக் கடைகள், மாவடு குறிச்சி மாந்தோப்பில் உள்ள மதுக்கடை உள்ளிட்ட 3 மது பானக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மனிதநேய ஜன நாயக கட்சி ஆகியவை சனிக் கிழமை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் எம்.இந்துமதி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி கண்டன உரையாற்றினார். சிபிஎம் நகரச் செயலாளர் வே.ரங்க சாமி, விவசாயிகள் சங்கம் வழக்குரைஞர் வீ.கருப் பையா, திராவிடர் விடு தலைக் கழக மாவட்டச் செய லாளர் சித.திருவேங்கடம், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செய லாளர் அப்துல் சலாம், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் மைதீன், ஒன்றிய துணைச் செயலா ளர் சேக் அப்துல்லா மற்றும் அனைத்து கட்சியினர், பெண்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வட்டாட்சியர் சுகுமாரை சந்தித்து மதுக் கடைகளை அகற்றக் கோரி மனு அளிக்கப்பட்டது.