தஞ்சாவூர், ஜூலை 13 - தோட்டக் கலைத்துறை யில் அமைச்சுப் பணியா ளர்கள், பணி மாறுதல்களில் நடைபெறும் முறைகேடு களை கண்டித்தும், அரசு விதிகளை முறையாக கடை பிடிக்க வலியுறுத்தியும், உரிய விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யும், தமிழ்நாடு வேளாண் மைத் துறை அமைச்சு பணியாளர் சங்கம் சார்பில், தஞ்சையில் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.சிவலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலா ளர் த.கீதா வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜெ. பலராமன் கோரிக்கைகளை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வடக்கு வட்டத் தலை வர் தி.இளங்கோவன், வட்டச் செயலாளர் ச.அஜய் ராஜ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தி.ரவிச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி நிறைவுரை யாற்றினார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஹேமலதா நன்றி கூறினார்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் கவியரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாவட்டச் செயலாளர் கருணாநிதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் முனைவர் பால் பாண்டி, மாவட்ட செயலா ளர் பழனிச்சாமி ஆகியோர் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ் நன்றி கூறி னார்.
கரூர்
கரூர் மாவட்டக் குழு சார்பில் தோட்டக் கலைத் துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத் தலை வர் சம்பத்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுப்பிரமணி யன், மாவட்ட செயலாளர் கெ.சக்திவேல், கல்வித் துறை நிர்வாக அலுவலர் கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன்ஜெய ராம், சங்கவி, மூர்த்தி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.