தஞ்சாவூர், மே 22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான கே.ஒ.பி படிப்பகத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பா.பாலசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் எம்.இந்துமதி (பேராவூரணி), ஆர்.எம்.வீரப்பெருமாள் (சேதுபாவாசத்திரம்), சிபிஐ பேராவூரணி ஒன்றியச் செயலாளர் கருப்பையா, சேதுபாவாசத்திரம் பொறுப்பாளர் ஜெயராஜ், மற்றும் வழக்குரைஞர் வீ.கருப்பையா, ஆர்.எஸ்.வேலுச்சாமி, சித்திரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மே 26-ஆம் தேதி காலை பேராவூரணி ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, 25ஆம் தேதி முதல் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், விலைவாசியைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வேலையின்மைக்கு எதிராகவும், துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.