தென்காசி, ஆக.14- தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழாவும் 75வது சுதந்திரதின விழாவும் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மருத்துவத்துறை இணை இயக்குநர், மருத்துவமனை மருத்துவர் யாசர் அராபத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவமனை முன்னாள், இந்நாள் ஊழியர்கள்மற்றும் தன்னார்வலர்களுக்கும் பொன்னாடை அணிவித்து தன்னார்வலர் சான்றிதழ் வழங்கினார். அப்போது புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளி செயலாளர் ஞானப்பிரகாசம் மற்றும் தலைமை ஆசிரியை செல்வசுகுணா ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினரர். தன்னார்வலர் விருது பெற்ற செயலாளர் தலைமையாசிரியர் இருவரையும் பள்ளி நிர்வாகி எபநேசர் கமலம் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.