சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் அரை நிர்வான போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தில் இரண்டு அலகுகள் மூலம் சுமார் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது இங்கு சுமார் 1350 க்கும் மேற்பட்ட ஆண் பெண் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு நெய்வேலி என்எல்சி யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது
இதைத் தொடர்ந்து என்டிபிஎல் நிர்வாகம் தங்களுக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 17ஆம் தேதி முதல் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
என்டிபிஎல் நிர்வாகம் என்எல்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற 7 கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இன்று 21 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்டிபிஎல் ஒப்பந்த ஊழியர்கள் அனல் மின் நிலையம் முன்பு தங்கள் மேல் சட்டைகளை கழட்டி ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக என்டிபிஎல் நிர்வாகம் என்எல்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்