districts

img

தொழிலாளர் விரோத போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் உருக்கு ஆலையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தொழிலாளர் விரோத போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் நிர்வாகத்தை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் விரோத போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். நியாயமான போனஸ் வழங்க வேண்டும். 8 ஆண்டுகள் கடந்தும் முடிவு பெறாத ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்ய வேண்டும். 39 மாத அரியர் தொகை வழங்க வேண்டும். வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான அனைத்து சலுகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அரியர் தொகை மற்றும் சம்பள பிடித்தம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சிஐடியு சேலம் உருக்கு ஆலை சங்க பொதுச் செயலாளர் கே. பி. சுசீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொமுச செயலாளர் பெருமாள் ஐஎன்டியுசி தலைவர் தேவராஜன். பிஎம்எஸ் தலைவர் வீரமணி, எல்எல்எப் செயலாளர் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி இளங்கோவன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.