world

img

ஹைதி நாட்டில் கலவரம்: 70 பேர் பலி

கரீபிய தீவு நாடான ஹைதியில் ஏற்பட்ட கலவரத்தில் 70 பேர் பலியானதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கரீபிய தீவு நாடான ஹைதியின் பான்ட்- சோண்டேவில் வியாழக்கிழமை நடந்த கலவரத்தில் 70 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

இருப்பினும், இதுபோன்ற கலவரங்கள் ஹைதி நாட்டில் சாதாரமானவைதான் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் தற்போது நடந்த பான்ட்- சோண்டேவில் பகுதியில் நடந்த கலவரம் அசாதாரணமானது என்றும் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலியாகியுள்ளனர். கலவரத்தை ஏற்படுத்திய கும்பல் வன்முறையின் போது வீடுகளுக்கும், கார்களுக்கும் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கலவரத்தின் பின்னணி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தாக்குதல் நடந்த பகுதிகள் முழுவதும், அந்த கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியைச் சுற்றிலும் காவல் படையை ஹைதி அரசு நிறுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருந்ததால், மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளையும் அரசு அனுப்பியது.