tamilnadu

img

கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

யானைகளின் வழித்தடத்தில் உள்ளதாக நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரத்தில்  உயர்நீதிமன்ற நியமித்த அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வ செய்தனர். பின்னர் பழப்பண்ணையை மூடக்கூடாது என நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலையடிவார பகுதியான கல்லாறு என்னுமிடத்தில் தோட்டக்கலை துறைக்குச் சொந்தமான பழப்பண்ணை அமைந்துள்ளது..ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1900 ஆண்டு துவக்கப்பட்ட இப்பழம் பண்ணையில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷ்ண நிலை, மண் மற்றும் நீர் வளம் காரணமாக மிக அரிதாக விளையும் மங்குஸ்தான், துரியன், வாட்டர் ஆப்பிள், முட்டை பழம், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல்வகை பழ வகைகள் மூலிகைச் செடிகள், மலர் வகைகள் வளர்கின்றன..விவசாயிகளுக்கான மரக்கன்றுகளும் இங்குத் தயார் செய்யப்பட்டு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..மேலும் தாவரவியல் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் கழற்றலுக்காக இங்கு வருவதும் வழக்கம்.

இந்நிலையில், இப்பண்ணை யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், பரதசக்கிரவர்த்தி கொண்ட அமர்வு இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று வழக்கறிஞர்கள்  கொண்ட குழுவை நியமித்தது.  இதன்படி, உயர் நீதிமன்ற அமைத்த குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சி.மோகன், ராகுல் பாலாஜி, சந்தானராமன் மற்றும் அரசு வழக்கறிஞர் முகமது சாதிக் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.

அப்போது, மாணவ மாணவிகள், சமூக நல ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கல்லாறு பழப்பண்ணையை மூடக்கூடாது என உயர்நீதிமன்ற குழுவினரின் மனுக்களை அளித்தனர்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகா செயலாளர் கனகராஜ், மாதர் சங்கத்தின் ராஜலட்சுமி மற்றும் மேட்டுப்பாளையம் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பாஷா ஆகியோர் கல்லாறு அரசு பழப்பண்ணையின் அவசியம் குறித்தும், இதே இடத்தில் யானைகளின் வழித்தடத்தில் உள்ள  தனியார் பள்ளி மற்றும் தனியார் கேளிக்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அப்புறப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கும் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும் அரசு பழப்பண்ணையை மூட முயற்சிப்பது நியாயமற்றது என வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்

மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் குழுவினரை நேரில் சந்தித்து கல்லாறு பழப்பண்ணையின் அவசியம் குறித்தும் 120 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழப்பண்ணையை தற்போது திடீரென யானை வழித்தடம் எனக் கூறுவதை ஏற்க இயலாது என்றார். இதனையெல்லாம் விசாரித்தரிந்த குழுவினர் பண்ணையை முழுவதுமாக ஆய்வு நடத்தினர்..ஆவணங்களின் அடிப்படையில் யானைகளின் இப்பகுதியில் நடமாடும் இடங்களா என ஆய்வு செய்தனர்..

அப்போது தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் உடனிருந்து உதவினர்.. ஆய்விற்குப் பின்னர் இது குறித்த விரிவான ஆய்வறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆய்வு குழுவினர் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..