education

img

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவிப்பு

புதுதில்லி,ஜூன்8- ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை படிக்க இயலும் என யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் ஒரே நேரத்தில் இருவேறு பட்டயபடிப்பு மற்றும் மற்ற படிப்புகளை உயர்கல்வி நிலையங்களில் படிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

  1. யுஜிசி அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயிற்றுவிக்க முடியும்.
  2. ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இருவேறு பட்டம், பட்டயப்படிப்புகளை நேரடியாக படிக்க முடியும்.
  3. இருவேறு படிப்பு வகுப்புகளும் ஒரே நேரத்தில் இல்லாதபடி, பல்கலைக்கழகங்கள் பார்த்துகொள்ள வேண்டும்.
  4. ஒரு படிப்பை நேரடியாகவும் மற்றொரு படிப்பை தொலைநிலைக் கல்வி அல்லது ஆன்லைன் மூலமும் படிக்கலாம்.
  5. பி.எச்டி. தவிர்த்து பிற படிப்புகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் பொருந்தும் என யுஜிசி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தார்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.