districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

கோவை, அக்.4- கோவை புறநகர் பகுதியில் நடை பயிற்சிக்காக  சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், திடீரென  சூலூர் அரசு மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு  மேற்கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சரின் திடீர்  ஆய்வு மருத்துவமனை பணியாளர்களிடம் பர பரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள சுகாதாரத்துறை அமைச் சர் மா. சுப்பிரமணியன், வெள்ளியன்று அதிகாலை யில் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14  கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொண்டார்.  அப்போது திடீரென சூலூர் அரசு மருத்துவமனை சாலையில் நடைபயிற்சிக்காக சென்ற, அமைச்சர், மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு மேற்கொண் டார்.  புறநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள்  பிரிவை பார்வையிட்டு, நோயாளிகளிடம் நேரடியா கப் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கலந் துரையாடி, மருத்துவமனையில் உள்ள வசதிகள்  குறித்து கேட்டறிந்தார். மருத்துவர்களின் எண் ணிக்கை குறைவாக இருப்பதாக எழுந்த பிரச்ச னையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். சுகாதாரத்துறை அமைச்ச ரின் திடீர் ஆய்வு காரணமாக, மருத்துவமனை யில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள் ளிட்ட பணியாளர்கள் பரபரப்பிற்கு உள்ளாகினர்.

அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க  வாலிபர் சங்கத்தினர் மனு.

திருப்பூர், அக். 4 - திருப்பூர் மாநகராட்சி 41 ஆவது வார்டுக்கு உட் பட்ட பகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்  கோரி மண்டல அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் 41 ஆவது வார்டுக்கு உட்பட்ட முருகம் பாளையம் பகுதியில் பழுதடைந்த கான்கிரீட்  சாலைகளை சீர மைக்க வேண்டும், தண்ணீர் குழாய் கசிவுகளை சரி செய்ய  வேண்டும். போதை கலாச்சாரம் பெருகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும், தூய்மைப் பணி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், தினமும் அரசு  பேருந்து வருவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்கிற  கோரிக்கைகளை முன்னெடுத்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மண்டல அலுவலக அதிகாரிகளிடம் வெள்ளியன்று மனு  கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு  ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.அருள், தெற்கு ஒன்றியச் செயலாளர் க.சிந்தன், முன் னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஈ.அங்குலட்சுமி, செல்வ ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கருப்புசாமி,  வாலிபர் சங்க முன்னாள் தலைவர் பொன்னுச்சாமி, வாலிபர் சங்க தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோபால், சம்பத்,  தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி  அளித்தனர்.

ஈஷா யோகா மையத்திற்கு முட்டுக் கொடுக்கும் பாஜக 

திருப்பூர், அக்.4- பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஈஷா யோகா மையத் திற்கு பாஜக நிர்வாகி முட்டுக் கொடுத்துள்ளார். பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் திருப்பூரில் பேட்டி அளித்த போது, ஈஷா யோகா மையத்தை தமிழக அரசு தொந்தரவு செய்து வருவதாகவும், ஈஷா யோக மையம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தி ருப்பது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார். ஈஷா யோகா மையத்தில் பலர் மர்மமான முறையில் காணாமல் போனது பற்றியும், அந்த வட்டாரத்தில் உள்ள பழங்குடி மக்க ளின் நிலத்தை ஈஷா யோகா மையத்தினர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது பற்றியும் குற்றச்சாட்டுகள் உள்ளன.  இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மையத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. திடீரென உச்சநீதிமன்றம் ஈசா யோகா மையத்தின் ஆய்வுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.  இந்த நிலையில் பாஜக நிர்வாகி முருகானந்தம் தானாக முன்வந்து ஈஷா யோகா மையத்திற்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார். ஈஷா யோகா மையத்தின் மீது உள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து அவர் எதுவும் கூறாமல் கடந்து சென்றார்.