districts

img

மாணவிகளைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்து: வாலிபர் சங்கம் சாலை மறியல்

புதுக்கோட்டை, செப்.22-  புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் மாணவிகளை ஏற்றாமல் புறக்கணிக்கும் அரசு நகரப் பேருந்து ஓட்டுநர்களைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதனன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவிகளை ஏற்றிச்செல்லாமல் அரசு நகரப் பேருந்து ஓட்டுநர்கள் புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்து ஓட்டுநர்களின் நடவடிக்கையைக் கண்டித்தும், குறித்த நேரத்திற்கு முன்னதாகவே பேருந்தை இயக்குவதைக் கண்டித்தும் புதனன்று சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மகாதீர் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுமதி, ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுரேஷ், விஜி, மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.